“நோ விகேஎஸ், நோ ஓபிஎஸ், நோ எம்கேஎஸ், நோ மோர் பிஜேபி…!”

தமிழச் சமூகமே,

எப்போது விழித்துக்கொள்ளப் போகிறாய்…?

வி.கே.சசிகலா மீது நீ கொண்டுள்ள கட்டற்ற வெறுப்பையும், கோபத்தையும் முதலீடாகக் கொண்டு,  மீண்டும் கொள்ளையடிக்கத் துடித்துக்கொண்டிருக்கிறது ஒ.பி.எஸ் அணி.

ஒ.பி.எஸ் அணியை எப்படியாவது ஓரங்கட்டிவிட்டு பதவியேற்பதன் மூலமாக  மீண்டும் தமிழகத்தை கொள்ளையடிக்கத் துடித்துக்கொண்டிருக்கிறது சசிகலா அணி.

இதில், கொள்ளையடிக்கும் வாய்ப்பு நமக்கு கிடைக்காமல் போய் விட்டதே என்ற விரக்தியில் இதையெல்லாம்  வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறது ஸ்டாலின் அணி.

எத்தனைக் காலம் தான் இந்த திராவிடக் கட்சிகளே கொள்ளையடித்துக் கொண்டிருப்பார்கள்… நாங்களும் கொஞ்சம் கொள்ளையடிக்க வாய்ப்பு தாருங்கள் என்கிறது பா.ஜ.க.

ஆக, இவர்கள் எல்லோரும் சண்டையிட்டுக்கொள்வது நம்மை கொள்ளையடிக்கத் தானே தவிர, நமக்கு சேவை செய்ய அல்ல என்பதை ஏன் இன்னும்
புரிந்துகொள்ள மறுக்கிறாய் தமிழ்ச்சமூகமே…

கருணாநிதி மீது கோபம் வந்தால் ஜெயலலிதாவிற்கு ஓட்டு போடுவது, ஜெயலலிதா மீது கோபம் வந்தால் கருணாநிதிக்கு  ஓட்டு போடுவது…

இப்படியே பழகிப்போன தமிழ்ச்சமூகம் தற்போது சசிகலா மீதுள்ள கோபத்தில் தன்னை ஆதரிக்கும் என்று காத்துக்கொண்டிருக்கிறார்  ஓ.பி.எஸ்.

மன்னார்குடியில் இருந்து வந்த சசிகலா அணியின் சொத்து மதிப்பு இன்று பல லட்சம் கோடிகள் என்றால்,

பெரியகுளத்தில் தேனீர் கடை நடத்திக்கொண்டிருந்த பன்னீர்செல்வத்தின் சொத்து மதிப்பு இன்று பல லட்சம் கோடிகள்.

தமிழகத்தின் கடந்த கால வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், இவ்வாறு அடித்துக்கொண்டவர்கள் பதவிக்காகவும், பணத்திற்காகவும் கொஞ்சமும் வெட்கமின்றி ஒன்று சேர்ந்துகொள்வார்கள்.

என்றும் அநாதையாய்  நிற்கப் போவது  அப்பாவித் தமிழ்ச்சமூகமான நீ மட்டுமே…

தமிழ்ச்சமூகமே, மாணவர்களே, இளைஞர்களே, உங்களுக்கு ஒரே ஒரு கேள்வி  மட்டுமே…

ஒட்டுமொத்த உலகமும் பாராட்டும் வண்ணம் நம் வீட்டு மாட்டிற்காகவே நீ மிகப்பெரிய அறப்போராட்டத்தை வெற்றிகரமாய் நடத்திக் காட்டினாய்…!

தற்போது   தமிழ்நாட்டிற்காக ஏன் அப்படிப்பட்ட ஒரு அறப்போராட்டத்தை மீண்டும்  நடத்துவதற்கு தயங்குகிறாய்..?

தெளிவாகப் புரிந்து கொள். உன் தலைவன் சசிகலாவும் அல்ல… பன்னீரும் அல்ல… ஸ்டாலினும் அல்ல… பா.ஜ.க.வும் அல்ல…  இருக்கும் இன்ன பிற ஊழல் கட்சிகளும் அல்ல.

தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க  நீ இப்போதாவது விழித்துக் கொள்.

உனக்கே தெரியாமல், உனக்குள்ளே இருக்கும் சசிகலாவின் மீதுள்ள கோபத்தைப் பயன்படுத்தி கொள்ளையடிக்கக் காத்திருக்கும் கூட்டத்திற்கும், மதவெறியை புகுத்த நினைக்கும் கூட்டத்திற்கும் இடம் கொடுத்துவிடாதே.

இரக்கப்பட்டு சசிகலாவிற்கும் இடம் கொடுத்துவிடாதே.

நமக்கான மாற்று அரசியலை முன்னெடுக்கும் நேரமிது… அது வரை உரக்கச் சொல்…

NO VKS NO OPS NO MKS NO MORE BJP…

தமிழ்நாட்டை காக்க வேண்டும் என முடிவெடுத்தால் இதை சமூக வலைதளங்களின் மூலமாக வேகமாகப் பரப்பு…

முடிந்தால் நீ முதல் நபராக  அறவழியில் தமிழகம் காக்க களம் இறங்கு…

இன்னும் முடிந்தால் உன் நண்பர்களையும் உன்னோடு இணைத்துக்கொள்…

இது நம் தமிழ் நாடு…

(Shared from Rayappa)