“படிப்படியாக மதுவிலக்கு”: நீங்க லூசா? நாங்க லூசா?

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற அக்கட்சியின் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசும்போது, “நான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவேன்” என்றார். அவரது இந்த பேச்சை சமூகவலைத்தளங்களில் பலர் கிழித்து தொங்கப்போட்டு வருகிறார்கள். அவர்களில் சிலரது பதிவுகள்:-

# # #

சுரேஷ் கண்ணன்: படம் பூராவும் வன்முறைக் கண்ணிகளை விதைத்துவிட்டு, கிளைமாக்ஸ் வசனத்தில் ‘போய் புள்ளகுட்டிங்களை படிக்க வைங்கடா’ என்று உபதேசம் செய்வதற்கு எத்தனை அசட்டுத் துணிச்சல் இருக்க வேண்டுமோ, அத்தனை அசட்டுத் துணிச்சல், அத்தனை காலமும் கள்ள மெளனமாக இருந்துவிட்டு ஆட்சியின் முடிவில் மதுவிலக்கைப் பற்றி பேசுவதற்கு இருக்க வேண்டும்.

அது அசட்டுத் துணிச்சலா? அல்லது மக்களின் அறியாமை காரணமாக ஆதாய துணிச்சலாக மாறுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

# # #

பிரசன்னா:

0a1f

# # #

சுந்தரராசு கிட்டு: அப்பாவி எம்.ஜி.ஆர். அடிமைத் தமிழர்கள் இருக்கும் வரையில் உங்கள் கோயபல்ஸ் பெரும்பொய்யை நம்பிக்கொண்டுதான் இருப்பார்கள். பார்ப்பனப் பாசிசம் மிக மிக  அருவெறுப்பானது. ஆபத்தானது..!

0a1h

# # #

கார்த்திக் கரூர்: எத்தனை உயிரிழப்புகள், கலாச்சார சீர்கேடுகள், தாலி அறுப்புகள், போராட்டங்கள், எதிர்ப்பு குரல்கள், சசிபெருமாளின் மரணம், சகோதரி நந்தினியின் தொடர் போராட்டம்…

இது எதற்குமே செவி சாய்க்காத நீங்கள், “பூரண மதுவிலக்கு அறிவிக்க முடியாது. அறிவித்தால் கள்ளச் சாராயம் பெருகிவிடும். அதனால் உயிரிழப்புகள் ஏற்படும்” என்று சப்பக்கட்டு கட்டிய நீங்கள் இன்று மதுவிலக்கைப் பற்றி பேசுவது தமிழக மக்களின் உயிரை மீண்டும் சூறையாடத் துடிக்கும் உங்களின் எண்ணத்தின் வெளிப்பாடு….

ஒரே கையெழுத்தில் பூரண மதுவிலக்கு, கள்ளச் சாராயம் காய்ச்சுபவர்களுக்கு தூக்கு தண்டனை, மது விற்பனை செய்தால் 6 ஆண்டுகாலம் கடுங்கால தண்டனை என்ற சட்டத்தை நிறைவேற்றிய நித்தீஸ்குமார் எங்கே? நீங்கள் எங்கே????

# # #

நாராயணன்.ஆர்: “ஆட்சியில் இருக்கும்போதே ஒண்ணும் புடுங்கலை. இதுல படிப்படியா புடுங்கப் போறாங்களாம்!” – பாண்டிச்சேரி கடற்கரையில் இரு பெண்மணிகள்!

யாரை சொன்னார்கள்? எதைச் சொன்னார்கள்? என்று எனக்குத் தெரியவில்லை….!

# # #

லோகநாதன்:

0a1i# # #

மணி தனுஷ்கோடி: வெள்ளத்துல சிக்கி சின்னாபின்னமா ஜனங்க இருக்கும்போது ‘அன்பான வாக்காள பெருமக்களே’ன்னு எவனோ எழுதிக் கொடுத்தத படிச்ச மேதாவி, படிப்படியா மதுவிலக்குன்னு எவனோ எழுதிக் கொடுத்தத படிக்குது! எழுதிக்கொடுத்த புண்ணியவானாச்சும் ‘முழு மதுவிலக்கு’ன்னு எழுதி கொடுத்திருக்கலாம்! செய்யவா போறாங்க…!

# # #

லாவண்யா ராமன்: நினைச்சேன். ஜெயலலிதா இந்த தேர்தலை எதிர்கொள்ள கடைசி ஆயுதமாக மதுவிலக்கை பயன்படுத்துவார் என. அதேபோல் ஓட்டுக்காக மதுவிலக்கை பயன்படுத்துகிறார்.

இத்தனை நாளாக என்ன செய்தாராமாம்??..

மதுவிலக்கிற்காக சசி பெருமாள் உயிர் விட்டும், பலர் போராடியும், அதை எல்லாம் எள்ளளவும் மதிக்காத ஜெயலலிதா இனி எப்படி கொண்டுவருவார் மதுவிலக்கை??

# # #

சூரியபிரகாஷ்: போராடிய சசிபெருமாள் அவர்களை சாகடித்துவிட்டு, மாணவர்களை அடித்து துவைத்து சிறையிலடைத்துவிட்டு, கோவனை பிடித்து சிறையில் போட்டுவிட்டு, சமீபத்தில் கூட மதுவிலக்கிற்காக போராடியவர்கள் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்துவிட்டு இப்பொழுது, இன்று வந்து பேசுவது நீங்கள்தானே முதல்வர் அவர்களே ???

# # #

உறவு கா.சே.பாலசுப்ரமணியன்: மதுவிலக்கை அம்மாவே பேசுறாங்க. பித்தம் தலைக்கேறிடுச்சு. தோல்வி பயம் புலம்ப வைக்குது…

‪சசிபெருமாள் ஆவி கூட மன்னிக்காது.

# # #

விஜய் தென்னரசு:

0a1a