சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் பிறந்தநாள் வாழ்த்து பெற்ற ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ இணை தயாரிப்பாளர் எம்.செண்பகமூர்த்தி!

ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் இணைத் தயாரிப்பாளர் எம். செண்பகமூர்த்தி இன்று (அக்டோபர் 27) தனது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் செண்பகமூர்த்தி, பிறந்தநாள் வாழ்த்துகளைப் பெற்றார்.

இந்தப் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் தலைமை அதிகாரி ஜிகேஎம்.தமிழ் குமரன்,
தயாரிப்பாளர் எல்ரெட் குமார், சக்தி பிலிம் ஃபேக்டரி சக்திவேலன், பல்வேறு விநியோகஸ்தர்கள் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு, தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.