சசிகலா, ஜெயா சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு எப்படி இருக்கும்: 5 சாத்தியங்கள்!

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் நாளைய தீர்ப்பு எவ்வாறு இருக்கும்?

  1. ஜெயலலிதா தவறு செய்தது உண்மை. தவறுக்கு சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் துணை புரிந்தார்கள் என்று இரு நீதிபதிகளும் சொன்னால், நீதி இந்த தேசத்தில் செத்து விடவில்லை என்று நம்பலாம். தவறு செய்தவர் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன்னால் நிரூபிக்கப்பட்டால் தண்டனை நிச்சயம் என்கிற கோட்பாட்டை நிலை நிறுத்தும். நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பு வரலாற்றில் இடம் பெறும், சசிகலா பதவி ஏற்க முடியாது, பெங்களூரு நீதிமன்றம் சென்று சரணடைய வேண்டும்.
  2. ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் என்று யாரும் எந்த தவறும் செய்யவில்லை, நீதி அரசர் குமாரசாமி, பள்ளிக்கூடம் முதல் கணக்கு பாடத்தை ஒழுங்காக படித்தவர் என்று சொன்னால், இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாக போகட்டும். நீதிமன்றத்தின் மீதுள்ள சிறு நம்பிக்கையும் தகர்ந்துவிடும். தாராளமாக சசி பதவியேற்க எந்த தடையும் இல்லை.
  3. இரு நீதிபதிகளும் சேர்ந்து இந்த வழக்கை மறுபடியும் கர்நாடக உயர்நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று சொன்னால், குன்ஹாவின் தீர்ப்பு ஏற்றுக்கொள்ளப்படும், சசி பதவி ஏற்க முடியாது, உடனடியாக பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். ஒருவேளை உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் விசாரிக்கும் வரை தண்டனையை நிறுத்தி வைத்து பிணை தந்தால் சிறைக்கு செல்ல வேண்டியது இல்லை.

மேலே சொன்ன 3 தீர்ப்புகளும் இல்லாமல் வேறுவிதமாக அமைந்தால்…

  1. பிளவுபட்ட தீர்ப்பு 1 (Split Verdict) : இரு நீதிபதிகளில் ஒருவர் (அமிதாவ் ராய்) குற்றம் நடந்தது உண்மை என்று கூறி தண்டனையை உறுதி செய்து, இன்னொருவர் (பினாகி கோஸ்) எந்த தவறும் நடைபெறவில்லை என்று விடுதலை செய்தால், இந்த வழக்கு larger bench என்று சொல்லக்கூடிய 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்படும். சசிகலா பதவியேற்க இப்போதைக்கு தடை இல்லை. மூன்று நபர்கள் கொண்ட அமர்வு அமைக்கப்பட்டு, விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வரும்வரை எந்த பிரச்னையும் இல்லை. பொதுவாக அந்த அமர்வில் இப்போது தீர்ப்பு சொல்லும் இரு நீதிபதிகளுடன் மூன்றாவதாக இன்னொரு நீதிபதி இருப்பார்.
  2. பிளவுபட்ட தீர்ப்பு 2 (Split Verdict 2) : இரு நீதிபதிகளில், ஒருவர் (அமிதாவ் ராய்) குற்றம் நடந்தது உண்மை என்று கூறி தண்டனையை உறுதி செய்து, இன்னொருவர் (பினாகி கோஸ்) கர்நாடகா நீதிமன்றம் மறுபடியும் விசாரிக்க வேண்டும் என்று தீர்ப்பு வந்தால், வழக்கு larger bench என்று சொல்லக்கூடிய 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்படும், சசிகலா பதவியேற்க முடியாது. ஏனென்றால் நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும், அதனால் சசி பதவி ஏற்க முடியாது. பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.

SUNDAR RAJAN