ஊழல் புகாருக்கு பதிலடி: வரவு – செலவு கணக்கை இணையத்தில் வெளியிட்டது நடிகர் சங்கம்!

நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் – ராதாரவி அணியினரை தோற்கடித்து, நாசர் – விஷால் அணியினர் வெற்றி பெற்றதை அடுத்து புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றார்கள்.

இந்த புதிய நிர்வாகிகள் நடிகர் சங்க நிலத்தை மீட்கும் பணியில் இறங்கினர். நிலத்தின் மீதிருந்த கடன்களை முழுமையாக அடைத்தவுடன், கட்டிடம் கட்டுவதற்காக ஸ்டார் கிரிக்கெட் போட்டி ஒன்றையும் நடத்தினார்கள்..

ஸ்டார் கிரிக்கெட் போட்டியில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரும் கலந்துகொண்டார்கள். இந்த கிரிக்கெட் போட்டி நிகழ்ச்சியை ஒளிபரப்பும் உரிமையை தனியார் தொலைக்காட்சிக்கு வழங்கிய வகையில் ஊழல் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன.

இது தொடர்பாக வாராகி என்பவர், நடிகர் சங்க நிர்வாகிகள் மீது பல புகார்களை கூறிவந்தார். இப்புகார்களுக்கு பதிலடியாக நடிகர் சங்கத்தின் வரவு – செலவு கணக்கை முழுமையாக நடிகர் சங்க இணையத்தில் வெளியிட இருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்திருந்தார்கள்..

அதன்படி, தற்போது நடிகர் சங்கத்தின் கணக்கு வழக்குகளை முழுமையாக nadigarsangam.org என்ற இணையத்தில் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

Read previous post:
0a1c
தியாகராஜன் குமாரராஜா இயக்கும் படத்தின் நாயகர்கள் விஜய் சேதுபதி – ஃபகத் பாசில்!

ஜாக்கி ஷெரஃப், ரவிகிருஷ்ணா, சம்பத் ராஜ், யாஷ்மின், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடிப்பில், தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் 2011ஆம் ஆண்டு வெளியான படம் 'ஆரண்ய காண்டம்'.

Close