தியாகராஜன் குமாரராஜா இயக்கும் படத்தின் நாயகர்கள் விஜய் சேதுபதி – ஃபகத் பாசில்!

ஜாக்கி ஷெரஃப், ரவிகிருஷ்ணா, சம்பத் ராஜ், யாஷ்மின், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடிப்பில், தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் 2011ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஆரண்ய காண்டம்’. யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான இப்படத்தை எஸ்.பி.சரண் தயாரித்திருந்தார்.

சிறந்த புதுமுக இயக்குநர் மற்றும் சிறந்த எடிட்டிங் என இரண்டு தேசிய விருதுகளை இப்படம் வென்றது. மேலும், விமர்சன ரீதியில் இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. தற்போது கூட இணையத்தில் அவ்வப்போது இப்படம் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

இப்படத்தைத் தொடர்ந்து தியாகராஜன் குமாரராஜா தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார். தற்போது எழுதியிருக்கும் கதையை அவரே தயாரிக்கலாம் என்று முடிவெடுப்பதிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்படத்தில் நாயகர்களாக நடிக்க விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் பாசில் இருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார் தியாகராஜன் குமாரராஜா. விரைவில் இருவருமே ஒப்பந்தமாவார்கள் என தெரிகிறது. இப்படத்தின் நாயகியாக நடிக்க முன்னணி நடிகையிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தியாகராஜன் குமாரராஜா இயக்கவிருக்கும் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Read previous post:
0a1
RSS proposal to award PhDs to people who haven’t gone to university

The Shiksha Sanskriti Utthan Nyas, an organisation tasked with pushing the Rashtriya Swayamsevak Sangh’s education agenda, has given Human Resource

Close