ஜெயலலிதாவுக்காக பால்குடம் எடுத்த 6 பெண்கள் மயக்கம்; ஒருவர் மரணம்!

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த (செப்டம்பர்) 22ஆம் தேதி முதல் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் விரைவில் பூரண நலம் பெற வேண்டும் என்று ஒரு மாதத்திற்கும் மேலாக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் பூரண நலம் பெற வேணடும் என்று அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள், தொண்டர்கள். கோவில்களில் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

அ.தி.மு.க. மகளிரணியைச் சேர்ந்த பெண்கள், ஜெயலலிதாவுக்காக கோவில்களில் மண்சோறு சாப்பிட்டும்,  பால்குடம் சுமந்து பாலாபிஷேகம் செய்தும் வழிபாடு நடத்தி வருகிறார்கள்.

கடந்த வாரம் திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோவிலில் அ.தி.மு.க.வினர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வழிபாட்டு நிகழ்ச்சியில், சாமி வந்து ஆடிய பொன்னுத்தாய் என்ற பெண் குலவை போட்டபடியே திடீரென மயங்கி விழுந்து மரணம் அடைந்தார்.

இன்று திருவண்ணாமலையில் உள்ள பச்சையம்மன் கோவிலில் நூற்றுக்கணக்கான பெண்கள் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 6 பெண்கள்  மயங்கி விழுந்தனர்.

அவர்கள் உடனடியாக திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் கமலாம்பாள் (வயது 60) என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற 5 பெண்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

.

Read previous post:
0a1c
ஊழல் புகாருக்கு பதிலடி: வரவு – செலவு கணக்கை இணையத்தில் வெளியிட்டது நடிகர் சங்கம்!

நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் – ராதாரவி அணியினரை தோற்கடித்து, நாசர் – விஷால் அணியினர் வெற்றி பெற்றதை அடுத்து புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றார்கள். இந்த புதிய

Close