“பி.வி.சிந்துவின் ரசிகனாகவே மாறிவிட்டேன்”: ரஜினிகாந்த் பாராட்டு!

ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ரியோ ஒலிம்பிக்கில் இதுவரை இந்தியா சார்பாக சாக்‌ஷி மாலிக் மட்டுமே ஒரு வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்திருந்தார்.

நேற்று நடந்த பேட்மிண்டன் அரையிறுதிப் போட்டியில் வென்ற இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, இன்று நடந்த இறுதிப்போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தார். ஒலிம்பிக் வரலாற்றில் ஓர் இந்திய வீராங்கனை வெள்ளி பதக்கம் வெல்வது இதுவே முதல்முறை.

வெள்ளி பதக்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு இந்தியா முழுவதும் பாராட்டுகள் குவிந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அவரது ட்விட்டர் சமூக வலைதளத்தில் பி.வி.சிந்துவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், பிவி.சிந்துவின் ஆட்டத்தைப் பார்த்து சிந்துவின் ரசிகனாகவே மாறிவிட்டதாகவும் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

ரஜினியின் ட்விட்டர் செய்தி:

0a6j