“திலீபன் மகேந்திரன் ஒரு மனித மிருகம்”: தமிழச்சி திடீர் குற்றச்சாட்டு!

பிரான்ஸில் வசிக்கும் தமிழச்சியும், சென்னையில் வசிக்கும் திலீபன் மகேந்திரனும் சுவாதி படுகொலை, ராம்குமார் மர்மச்சாவு ஆகிய விவகாரங்களில் போலீஸ் தரப்புக்கு எதிரான தகவல்களை தங்கள் முகநூல் பக்கங்களில் எழுதி வெளியிட்டு, சந்தேகங்களை எழுப்பி, பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை… இருவருக்குள்ளும் திடீர் மோதல் ஏற்பட்டிருக்கிறது. திலீபன் மகேந்திரன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அள்ளி வீசியிருக்கிறார் தமிழச்சி. திலீபன் மகேந்திரனை “மனித மிருகம்” என சாடும் தமிழச்சியின் முகநூல் பதிவு:-

காதலித்த பெண் வேறொருவரை திருமணம் செய்து கொண்டதற்காக, அப்பெண்ணிற்கு மறைவான இடத்தில் எங்கெங்கு மச்சங்கள் உள்ளன என்று பட்டியலிட்டு, “இராத்திரி 10 மணிக்கு மேல வாடின்னா ஓடியாந்துருவா. இவ எப்படி புதுமாப்பிள்ளையோட வாழ்ந்துடறான்னு பார்த்துடறேன்” என்று ஒன்றரை வருடங்களுக்கு முன் பேஸ்புக்கில் ஒரு மனித மிருகம் எழுதியது.

பேஸ்புக்கில் சாகசக்காரனாக, போராளியாக பில்டப் கொடுத்து, தனது நட்பு வட்டத்தில் இருக்கும் பெண்களிடம் சாட் செய்து, காமலீலைகள் நடத்தும் அதே மனித மிருகத்திடம் சிக்கிய இன்னொரு பெண், 2 குழந்தைகளுக்கு தாய்.

“கணவனை விட்டுவிட்டு வந்துவிடு. நான் வாழ்க்கை கொடுக்கிறேன்” என்று பேசியதை நம்பி வீட்டை விட்டு ஓடி வந்த அந்த பெண்ணிடம் சில காலம் இருந்துவிட்டு, சென்னையில் குழந்தைகளோடு தவிக்க விட்டு ஓடிப் போனது அந்த இரண்டு கால் மனித மிருகம். இதில் அந்தப் பெண்ணிற்கு அடிக்கடி அடி. வேறு எந்த ஆணிடம் பேசினாலும் சந்தேகம் வேறு.

இந்த மிருகம் எதற்காக ஓடியது என்றால், கோவையில் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு.

அந்த மிருகம் தேசிய கொடியை எரித்தது என்பதற்காகத்தான் த.பெ.தி.க.வில் இருந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டது என்று பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். பொது ஒழுக்கமற்ற அந்த மனித மிருகத்தை பெரியார் இயக்கத்தில் வைத்திருப்பது இயக்கத்திற்கு அவப்பெயர் என்றே துரத்தப்பட்டது. அதற்கு பிறகாவது திருந்தியதா?

திரும்பவும் சாட்டில் மாட்டியது ஒரு லண்டன் பெண். அந்த நேரத்தில் தான் சுவாதி படுகொலை தொடர்பான விவாதங்கள் நடந்துகொண்டிருந்தது. பேஸ்புக்கில் போராளியாகவும், சாட்டுக்குள் வேறு சில பெண்களிடம் வேறு மாதிரியாகவும் பழக ஆரம்பித்தது. ஓடிவந்த பெண், “என்னை ஏமாற்றி விட்டாயே” என்று கதறியது. “லண்டன் பெண்ணைத்தான் காதலிக்கிறேன். நீ எனக்கு அம்மா மாதிரி” என்றது அந்த மிருகம்.

ஒருபுறம் போராளியாகவும், மறுபுறம் புள்ளிராஜாவாகவும் சுற்றிக்கொண்டிருந்த அந்த மனித மிருகம் சிறைக்குள் அடைக்கப்பட்டது. அந்த சில நாட்களில் காதலிகளில் ஒருவருக்கு உண்மை தெரியவே. தற்கொலைக்கு அந்த காதலி முயன்றுள்ளார்.

அந்த மிருகம் சிறைக்குச் செல்ல இருந்த 3 வாரங்களுக்குமுன் என் தொடர்பிற்கு வந்து சில உதவிகள் கேட்டது. அந்த மனித மிருகம் குறித்து எதுவும் தெரிந்திருக்கவில்லை. போலிசிடம் அந்த மனித மிருகம் மாட்டப்படும்போது அத்தகவலை என்னிடம் சொல்லச் சொல்லியது.

போலிசில் பிடிபட்ட ஒரு மணி நேரத்திற்குள் தகவல் வர, உடனடியாக அவனை மீட்கும் முயற்சிக்கு ஏற்பாடு செய்தேன். அப்போதுதான் அந்த மனித மிருகம் குறித்த தகவல்களை தோழர்கள் பகிர்ந்துகொண்டார்கள். அந்த மிருகம் மீது விமர்சனங்கள் இருப்பினும், அரச பயங்கரவாதத்திற்காக அவனை ஆதரிக்க வேண்டும். அவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு சிறையில் இருந்து பாதுகாப்பான இடத்தில் தங்கும் வரை பாதுகாப்பு அளித்தனர்.

அந்த மனித மிருகத்தால் பாதிக்கப்பட்ட 3 பெண்களிடம் தகவல்களை கேட்டறிந்தேன். அனைத்தும் உண்மை என்றார்கள். அம்மா மாதிரி என்று சொன்ன பெண்ணே தங்களுக்குள் நடந்த கதையை தெளிவாக கூறிவிட்டார்.

சிறைக்குள் இருந்து வெளிவந்த மறுநாளில் என்னுடன் அந்த மிருகம் தொடர்புக்கு வந்தபோது கடுமையாக கண்டித்தேன். அடுத்த முறை எந்த பெண்ணிடமாவது இந்த மாதிரி வேலையை ஆரம்பித்தால் ‘குஞ்சை அறுத்து கையில் கொடுத்து விடுவேன்’ என்று திட்டிவிட்டு சாட் பக்கத்தில் இருந்து தடை செய்தேன்.

இதற்கு பிறகே அந்த மிருகம் என்னை குறித்து குழுவிற்குள் கண்டபடி பேச ஆரம்பித்தது. அத்தகவல் அப்போதே தெரிந்தபோதும் “பன்றிகளுக்கு தத்துவம் போதிப்பது பன்றிகளுடன் சேர்ந்து நாமும் புரளுவதற்கு சமம்” என்று புறக்கணித்திருந்தேன்.

எனது புறக்கணிப்பை முட்டாள் வேறு வித கணிப்புக்குள் கொண்டு சென்றது. ‘அவ’, ‘இவ’, ‘கிழவி’, ‘பொம்பள’ என்று இழித்து பேசி புரட்டுக் கதைகளை தொடர்ந்து “மலத்தை தின்று கக்கி வைத்தது போல்” புரளிகளை அள்ளி வீசிக்கொண்டிருக்கிறது அந்த மனித மிருகம்.

இதற்கு மேல் இந்த மிருகத்தை இழிவுபடுத்துவதற்கு அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத தேவையில்லை. ஆனால் இந்த மிருகத்திற்கு பணத்தை அள்ளிக் கொடுத்து ஏமாந்த நபர்கள் பின்னூட்டங்களில் தகவல்களை கேட்கலாம். [எவ்வளவு தொகை கொடுக்கப்பட்டது என்பதற்கான தகவல்களையும் பதிவிடவும்]

என் மீதான முரண்பாட்டை முன்வைக்கலாம்.
உண்மைகளை அறியத்தரும் கடமை எனக்கிருக்கிறது…

#தமிழச்சி
12/10/2016