“மன்னிச்சிருடா தம்பி ராம்குமார்… இந்த நாட்டில் வாழவே பயமா இருக்கு…!”

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் மர்மமான முறையில் மரணம் அடைந்திருப்பது குறித்து கேள்வி எழுப்பும் ஏராளமான பதிவுகள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகின்றன. அவற்றில் சில:-

BHARATHI NATHAN: கொலைகாரர்களின் கையில் தான் கொடுக்கப்பட்டிருக்கிறது எல்லா நியாயங்களுக்கான தீர்ப்பும்.

RAHIM JOURNALIST: தோட்டாவுக்குப் பதில்…. மின்சாரம்….

என்கவுண்டர் ஸ்டைல மாத்திட்டாங்க போல…

G PITCHU MANI:ராம்குமார் தற்கொலை செஞ்சுட்டான்!”.

“யார் சொன்னா?”

“கொலை செஞ்ச போலீஸ்கார்களே சொன்னாங்க!”

RAJASANGEETHAN JOHN: இவற்றையெல்லாம் எங்கோ அமர்ந்துகொண்டு எள்ளலுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பான், ஸ்வாதியை உண்மையில் கொன்றவன்!

KASI CINEMATOGRAPHER: வருந்துகிறேன்

இவன்தான் குற்றவாளி என்று இன்றுவரை நிரூபிக்கப்படாத நிலையில், இந்தப் பையன் கைதான அன்று, உண்மை என்ன என்று தெரியாமல், ஆர்வக்கோளாறில் இந்தப் பையனுக்கு எதிராக பதிவு போட்டதற்கு.

மன்னிச்சிருடா தம்பி ராம்குமார்.

இந்த நாட்டில் வாழவே பயமா இருக்கு.

SORNAKUMAR R: ஸ்வாதி கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகள் யாரென அதிகாரவர்க்கத்திற்கு அடையாளம் தெரிந்துவிட்ட நிலையில், குற்றம் சாட்டப்பட்ட ராம்குமார்

உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது என்றால்… குற்றவாளிகள் காப்பாற்றப்படுகிறார்கள், ஆடு மேய்த்த அப்பாவி பலிஆடாக ஆக்கப்பட்டுள்ளான் என்றே பொருள்..!!!

மானங்கெட்ட தேசமடா

ஜி விஜயபத்மா எழுத்தாளர் இயக்குனர்: “கதம் கதம்” -முடிச்சிட்டாங்கப்பா….! தமிழ்நாட்டில் உயிருக்கான மதிப்பீடுகள் என்ன? சில் நாட்கள் தலைப்பு செய்திகள்… பின் செய்திகள்… .then “close the file…! That’s all.

JAYACHNDRA HASHMI: ஸ்வாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் வெளியாகிறது.

இது ஒரு ஆணவக் கொலை என்று முன்பு லேசாக சொல்லப்பட்ட ஒரு யூகத்தை இப்போது திடமாக நம்பத் தோன்றுகிறது. சிறிய காரணங்களுக்காக எல்லாம் அதிகாரம் யாரையும் காவு வாங்காது.

முடிச்சவிழாத வழக்குகளின் பிரதான முகங்கள் தானாகவே ‘கொலை’ செய்து கொள்வதன் மர்மம் என்ன? நிச்சயம் இந்த வழக்கில் உயர்மட்ட விசாரணை நடந்தாக வேண்டும். அதற்கான நிர்பந்தங்கள் எல்லா மட்டங்களில் இருந்தும் கொடுக்கப்பட வேண்டும்.

தயவுசெய்து ராம்குமாரின் மரணத்தோடு ஸ்வாதி வழக்கு முடிந்துவிட்டதாக மட்டும் நினைத்து விடாதீர்கள் !!!

வாசுகி பாஸ்கர்: facebook ல, அவனவன் ஸ்வாதி கொலையை பற்றி துப்பு துலக்கிட்டு இருந்தப்ப, பெண் அநியாயமா கொல்லப்பட்ட வேகத்தில நம் ஒவ்வொருத்தருக்கும் இருக்கும் பொது அறம், ராம்குமார் கிடைத்ததும் சற்றே நிம்மதி அடைந்தது!

காவல்துறை எவ்வளவு அய்யோக்கியத்தனங்களுக்கு சொந்தமானதாக இருந்தாலும், இப்படியான கொலைகளில் நியாயமாக தான் செயல்படும் என்கிற அபார நம்பிக்கை என்னை போன்ற சாமானியனை சட்டத்தின் பக்கமே நிற்க வைத்தது!

ராம்குமாருக்கு ஆதரவாக செயல்பட்ட திலீபன் மகேந்திரன் என்கிற பையனின் அதிக பிரசங்கித்தனத்தை கிண்டலடித்து, அவனை கைது செய்த வரை, சரியென தான் நினைத்திருந்தோம்!

ஆனால், இப்போ முதல்முறையாக ராம்குமார் தான் கொலை செய்திருப்பானா என்கிற சந்தேகம் வருகிறது! இந்த சூழலில் தான் திலீபன் மகேந்திரன் தாக்கப்பட்டதற்கும், போலீஸ் ராம்குமாரை கைது செய்யப் போனபோது, சினிமாவில் சரியான நேரத்துக்கு என்ட்ரி கொடுக்கும் போலீஸ் போல, கழுத்தை அறுக்கும்போது கச்சிதமா போய் நின்ன போலீஸ் மேல சந்தேகம் வருது!

அதுவும் கரண்ட்டை கடிச்சி சாகுறது சத்தியமா சாத்தியம் இல்லை, ஜாமீன் மனு விசாரணைக்கு வர்ற நேரத்தில அவனுக்கு சாக வேண்டிய அவசியம் தான் என்ன?

தொடர் கேள்விகளும், போலீஸ் தரப்பில் இருந்து சரியான பதில் இல்லாமலிருந்தது, என எல்லாத்தையும் பாக்குறப்போ, ‘விசாரணை’ படம் நம்ம கண்ணு முன்னால நிக்காம போகிற அளவுக்கு இந்த சிஸ்டமும், சட்டத்தை கையாள்கிற விதமும் என நமக்கு சந்தேகம் வராம இருக்கிறது தான் ஆச்சரியம்!

எவன் என்ன சொன்னாலும், உங்க மேல இன்னமும் நம்பிக்கை வைக்குற பொது ஜனத்துக்கு நல்லா வைக்கிறீங்கடா வாயில கரன்ட்டு. …!