‘ஓடி ஓடி உழைக்கணும்’: சந்தானத்துக்கு ஜோடி ‘அநேகன்’ நாயகி!

தனுஷ் நடித்த ‘அநேகன்’ படத்தின் கதாநாயகி அமைராவுடன் ஜோடி சேர்ந்து சந்தானம் நடிக்கும் புதிய படத்திற்கு ‘ஓடி ஓடி உழைக்கணும்’ என்று பெயரிடபட்டுள்ளது.

சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘தில்லுக்கு துட்டு’ படம் பெரும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து வரிசையாக பல படங்களில் சந்தானம் ஹீரோவாக ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகிறார்.

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தை இயக்கிய மணிகண்டன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் புதிய படத்திற்கு ‘ஓடி ஓடி உழைக்கணும்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் சந்தானம் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக தனுஷுடன் ‘அனேகன்’ படத்தில் நாயகியாக     நடித்த அமைரா நடிக்கிறார்.

இப்படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. படத்தின் பூஜையும் இன்று சென்னையில் நடைபெற்றது.

0a

Read previous post:
t2
வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த பணத்தை கொள்ளை அடிக்கும் 4 சராசரி இளைஞர்கள்!

தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்குவது இப்போதெல்லாம் சர்வசாதாரணமாகிவிட்டது. ஆண்ட / ஆளுகிற கட்சிகள் பல கோடி ரூபாய் கறுப்பு பணத்தை இதற்கென

Close