அப்போலோவுக்கு ராகுல் காந்தி திடீர் வருகை: ஜெயலலிதா உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்!

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, முன்னறிவிப்பின்றி திடீர் பயணமாக இன்று சென்னை வந்தார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து ஆயிரம் விளக்கு கிரீம் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனை வரை ராகுல் வந்து சேர போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.

விமான நிலையத்திலிருந்து 15 நிமிடங்களில் ராகுல் அப்போலோ மருத்துவமனை வந்தடைந்தார். அங்கு சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதலவர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து ராகுல் நேரில் கேட்டறிந்தார். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும் விசாரித்தார். அது குறித்து அப்போலோ மருத்துவர்கள் அவருக்கு விளக்கம் அளித்தனர்.

ராகுல் காந்தியுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரும் அப்போலோ மருத்துவமனைக்கு வந்திருந்தார்.

Read previous post:
0a
“ராம்குமாரின் ஊரிலிருந்து விடை பெறுகிறேன்!” – திலீபன் மகேந்திரன்

ராம்குமாருக்கு இன்றுடன் காரியம் முடிந்தது... தன் மகன் உட்பட அனைத்தையும் இழந்த ராம்குமார் குடும்பத்துக்கு உதவி கேட்டிருந்தேன். நேற்று வரை 46 ஆயிரம் ரூபாய் தோழர்கள் இணைந்து

Close