தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சி! – சுப்ரமணியன் சாமி அறிக்கை

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு ஏற்பட்டு, அப்போலோ மருத்துவமனையில் கடந்த 15 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். முதல்வரின் உடல்நிலை குறித்து விரிவான அறிக்கையை நேற்று வெளியிட்ட அப்போலோ மருத்துவமனை நிர்வாகம், அவர் நீண்ட காலம் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என குறிப்பிட்டிருந்தது.

ராகுல் காந்தி உட்பட பல தலைவர்கள் நேரில் மருத்துவமனைக்கு சென்று ஜெயலலிதாவின் உடல்நிலையை கேட்டறிந்து வருகின்றனர். தலைவர்கள் யாரும் ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்கப்படவில்லை என்பதால் அவரின் உடல்நிலை பற்றி பலவிதமான வதந்திகளும் பரப்பப்பட்டு வருகின்றன.

இவற்றுக்கிடையில் பா.ஜ.க எம்.பி. சுப்ரமணியன் சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், தமிழக முதல்வரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு குடியரசு தலைவர் ஆட்சியை தமிழகத்தில் அமல்படுத்துமாறு உள்துறை அமைச்சகத்தை வலியுறுத்தியிருக்கிறார்.

சுப்ரமணியன் சாமி அறிக்கை:

sswamy

 

இன்று மாலை தமிழக அரசின் தலைமை செயலாளர் ஆளுநரை சென்று சந்தித்திருப்பது முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.