காதல் அகதீ – விமர்சனம்

காய்கறி மார்க்கெட்டில் கடை வைத்துக்கொண்டு தாதாவாக இருந்து வருகிறார் ஹரிகுமார். இவருக்கும் ஒரு கும்பலுக்கும் அடிக்கடி சண்டை வருகிறது. ஒரு சண்டையின்போது நாயகி ஆயிஷா, ஹரிகுமாரை பார்க்கிறார். பார்த்தவுடனே அவர்மீது காதல் வயப்படுகிறார்.

இந்நிலையில் ஆயிஷாவின் மாமா மகன் சுதர்சன், ஹரிகுமாரிடம் வேலைக்கு செல்கிறார். அன்று இரவு ஹரிகுமாரிடம் அடிப்பட்ட கும்பல் ஹரிகுமாரை தாக்குகிறது. அந்த சண்டையில் சுதர்சன் ஹரிகுமாரை காப்பாற்றுகிறார். இதனால் ஹரிகுமார் சுதர்சனை தன்னுடைய வீட்டிலேயே தங்க வைக்கிறார்.

சுதர்சனை பார்க்க வருவதாக கூறி, ஹரிகுமார் வீட்டுக்கு அடிக்கடி வந்து தன்னுடைய காதலை ஹரிகுமாரிடம் சொல்லுகிறார் ஆயிஷா. ஹரிகுமாரும் காதலை ஏற்றுக்கொள்கிறார். ஆனால் ஆயிஷாவின் அப்பா ஒரு தாதாவுக்கு தன் மகளை கட்டிக்கொடுக்க மறுக்கிறார். இதனால், ஹரிகுமார் அடிதடிகளை விட்டு திருந்தி வாழ முடிவெடுக்கிறார். அதன்பின் இருவருக்கும் திருமணம் நடக்கிறது.

அன்று இரவு ஹரிகுமாரிடம் மார்க்கெட்டில் அடிவாங்கிய கும்பல், ஹரிகுமாரின் ஆட்களை கொலை செய்து, ஹரிகுமாரையும் வெட்டி சாய்த்துவிட்டு செல்கிறது. இதை பார்க்கும் ஆயிஷா மயக்கமடைகிறார். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிக்கும் ஹரிகுமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.

ஹரிகுமார் அந்த கும்பலை பழிவாங்கினாரா? தன் மனைவியுடன் சேர்ந்தாரா? அவர் என்ன ஆனார்? என்பது மீதிக்கதை.

ஆக்ஷன் ஹீரோவாக கலக்கிய ஹரிகுமார், இந்த படத்திலும் ஆக்‌ஷன் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ஆயிஷா முதற்பாதியில் துறுதுறு நடிப்பால் ரசிகர்களை கவர முயற்சி செய்திருக்கிறார். ஆனால் பிற்பாதியில் கணவருக்காக ஏங்கும் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

ஆயிஷாவின் மாமா மகனாக நடித்திருக்கும் சுதர்சன் மற்றும் பாண்டியராஜன், பிளாக்பாண்டி, தேவதர்ஷினி, சிங்கமுத்து, மனோகர் ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

.காதல் கதையை மையமாக எடுத்துக்கொண்ட இயக்குனர் ஷாமி திருமலை, அதில் ஓரளவே வெற்றி கண்டிருக்கிறார் என்றே சொல்லலாம். ஆனால் படத்தில் நீண்ட திரைக்கதை, லாஜிக் மீறல்கள் அமைத்து படத்திற்கு தொய்வு ஏற்படுத்தியிருக்கிறார். ரசிக்கும்படியான காட்சிகள் அமைத்திருந்தால் ரசித்திருக்கலாம்.

‘காதல் அகதீ’ – பாவம், திரைக்கதை தான் அகதி!

Read previous post:
0
A Mega Talent Hunt Show

IT Stars - A mega talent hunt show for IT and corporate organisations has been organised by leading event portal,

Close