கிளைமாக்ஸ் காட்சிக்காக வெங்கட் பிரபுவோடு கைகோர்க்கும் 5 இயக்குனர்கள்!

இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது இயக்கி வரும் ‘சென்னை 28’ படத்தின் இரண்டாம் பாக கிளைமாக்ஸ் காட்சியில், தனது நண்பர்களான 5 இயக்குனர்களை நடிக்க வைத்துள்ளார்.

வெங்கட் பிரபுவின் உதவி இயக்குனர்களாகிய ‘நளனும்  நந்தினியும்’ புகழ் வெங்கடேஷ் ராமகிருஷ்ணா, ‘வடக்கறி’ புகழ் சரவணா ராஜன், ‘கனிமொழி’ புகழ் ஸ்ரீபதி, ‘நவீன சரஸ்வதி சபதம்’ புகழ் சந்துரு ஆகிய நால்வரோடு ‘காவல்’ படத்தின் இயக்குனரும், வெங்கட் பிரபுவின் நண்பருமான  நாகேந்திரன் சிறப்பு காட்சியில் நடித்துள்ளார்கள்.

அது மட்டுமின்றி இந்த அனல் பறக்கும் கிளைமாக்ஸ் காட்சிக்காக ஒரு பிரம்மாண்ட அரங்கத்தை படக்குழுவினர் எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

‘சென்னை 28 ‘படத்தின் முதல் பாகத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் இரண்டாம் பாகத்தில் நடிக்கின்றனர். இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார் யுவன்ஷங்கர் ராஜா.