தனுஷின் புதிய வீட்டுக்கு ரஜினிகாந்த் சர்ப்ரைஸ் விசிட்!

திரைப்பட முன்னணி நடிகரும், முன்னணி தயாரிப்பாளருமான தனுஷ் புதிய வீடு வாங்கியிருக்கிறார். இந்த புதிய வீட்டுக்கு அவர் குடிபுகும் நிகழ்ச்சி கடந்த வியாழனன்று நடைபெற்றது.

அப்போது தனுஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் யாரும் எதிர்பார்க்காத வகையில், அவரது மாமனாரும், நடிகருமான ரஜினிகாந்த் அந்த புதிய வீட்டுக்கு திடீரென காரில் வந்திறங்கி, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

தனுஷின் கழுத்தைச் சுற்றி கை போட்டு அணைத்து, அவருக்கு வாழ்த்துச் சொல்லி ஆசி கூறினார் ரஜினி. தனுஷ் புதுமனை புகுந்த அந்நாள் தான் தனுஷின் பிறந்தநாளும்கூட என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி ஒரு குழந்தையைப் போல தனுஷின் கழுத்தைச் சுற்றி கை போட்டு அணைத்திருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் தனுஷ், தான் ஆசீர்வதிக்கப்பட்டவன் என பொருள்படும்படியாக “Blessed” என்று அப்புகைப்படத்துக்கு தலைப்பிட்டு இருக்கிறார்.

0a4v

Read previous post:
0a1i
‘கபாலி’ – ஒரு அதிசய ராகம்… ஆனந்த ராகம்… அபூர்வ ராகம்…!

‘கபாலி’… இந்த திரைப்படம் உலக அளவில் வெற்றி. இதில் எந்த சந்தேகமும் கிடையாது. இந்த படத்தை வடிவமைத்து, செயலில் பயணித்து, செலவில் குறை இன்றி நடத்தி முடித்து,

Close