கருணாநிதிக்கும் உடல்நலக் குறைவு: பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை!

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். அவரை பார்க்க பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

இந்நிலையில், அ.தி.மு.க.வின் எதிரிக்கட்சியான தி.மு.க.வின் தலைவர் கருணாநிதிக்கும் தற்போது உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் அவருக்கு அவருடைய வீட்டிலேயே சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவரை பார்த்து நலம் விசாரிப்பதற்கும் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது..

இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த சில நாட்களாக, வழக்கமாக அவர் உட்கொண்டுவரும் மருந்துகளில் ஒன்று ஒத்துக் கொள்ளாத நிலையில் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.

அதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு அவர் ஓய்வெடுத்து வருகிறார். மருத்துவர்கள் மேலும் சில நாட்கள் அவரை ஓய்வெடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

எனவே பார்வையாளர்கள் அவரைக் காண வருவதைத் தவிர்த்து, ஒத்துழைப்பு நல்க வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read previous post:
0a
“அரசு செலவில் அல்ல, சொந்த செலவில் சிகிச்சை பெறுகிறார் ஜெயலலிதா”: புதிய தகவல்கள்!

எப்படி எனக்கு மட்டும் தெரியும் என கேட்கக் கூடாது. போலீஸ் உட்பட யார் கேட்டாலும் யாருக்கும் விளக்கம் சொல்ல வேண்டிய அவசியமில்லை. உண்மை என்பதை மட்டும் அழுத்திச்

Close