“அரசு செலவில் அல்ல, சொந்த செலவில் சிகிச்சை பெறுகிறார் ஜெயலலிதா”: புதிய தகவல்கள்!

எப்படி எனக்கு மட்டும் தெரியும் என கேட்கக் கூடாது. போலீஸ் உட்பட யார் கேட்டாலும் யாருக்கும் விளக்கம் சொல்ல வேண்டிய அவசியமில்லை. உண்மை என்பதை மட்டும் அழுத்திச் சொல்கிறேன்.

அப்பொல்லோவில் அம்மா அவர்கள் மிக மிக வேகமாக குணம் அடைந்து வருகிறார். பேசுகிறார். நடக்கிறார். நன்கு தயாராகி விட்ட போயஸ் தோட்டத்திற்கு மிக விரைவில் திரும்புவார்.

அவருக்கு உள்ள கிருமி ஆக்கிரமிப்புகள் வெகுவாக குறைந்து விட்டன. கிட்னி சம்மந்தப்பட்ட செய்திகள் எல்லாம் வதந்திகளே. சர்க்கரை, கட்டுப்பாட்டில் உள்ளது. ரத்த அழுத்தம் சீராக உள்ளது. கொடுக்கும் மருந்துகள் சரியாக வேலை செய்கிறது.

நிர்வாகம் கட்டுப்பாட்டில் உள்ளது. சில பல அரசாங்க வேலைகள் தாமதப்படலாம். இருப்பினும், அவற்றை சரி செய்ய முக்கிய அதிகாரிகளும் அமைச்சர்களும் முனைப்போடு இருக்கிறார்கள்.

நுரையீரல் மட்டும் ஒரு இயந்திரத்தின் உதவியுடன் சீராக வேலை செய்கிறது. இயந்திர உதவி இல்லாமலேகூட இருக்க முடியும். ஆனாலும், இன்னும் சிறிதுநாள் இருக்கட்டும் என முடிவு செய்திருக்கிறார்கள் மருத்துவர்கள்.

தகவல் அறியும் சட்டம் மூலம் அவருக்கு என்ன செலவு ஆனது, எந்த எந்த மருந்து வகைகள் அளிக்கப்பட்டது, எப்படிப்பட்ட நோயால் பிரதானமாக நோய் வாய்ப்பட்டிருக்கிறார் என்பதை எல்லாம் தெரிந்துகொள்ள யாரும் ஆசைப்பட வேண்டாம். ஒரு தகவலும் கிடைக்காது. காரணம், அரசாங்க செலவு ஏதும் இன்றி சொந்த செலவில்தான் மருத்துவம் நடைபெற்று வருகின்றது.

நல்லபடியாக முதல்வரை காப்பாற்றி பத்திரமாக வீட்டிற்கு அனுப்பும் அந்த நாளில் அப்பொல்லோவின் கொடி உலகமெங்கும் உச்சியில் பறக்கும். இந்தியா வந்த லண்டன் டாக்டர் நமது இந்திய மருத்துவர்களைப் புகழ்ந்தது எல்லாம் ஒரு நாள் புத்தகமாக வரும். இனி உலகமெங்கும் உள்ள செலவந்தர்களின் முதல் வரிசை மருத்துவமனையாக அப்பொல்லோ திகழும்

ஒரு தனி மனிதரின் நிர்வாகமும், அதிகாரமும், அன்பும் நிறைந்த இந்த 30 நாள் ஆளுமைகள் என்றாவது முழுமையாக வெளிவரும்.

கூட்டுப் பிரார்த்த்னைகள், கட்சி பேதமற்ற நலம் விசாரிப்புகள், கட்டுக்கோப்புடன் உள்ள கட்சி, மக்களின் மாறாத அன்பு – இவை எல்லாம் அம்மாவின் அஸ்திவாரங்கள்.

இனி பயமில்லை… நலமே….

( இதை எழுதுவதற்கு எந்த சுயநல நோக்கமும் இல்லை. பல கட்டுப்பாடுகளையும் மீறி என்னால் பல தகவல்கள் சேர்க்க முடிவதாலும், அவை நல்ல விஷய்ங்களாக இருப்பதால் அவற்றை சொல்வதில் உள்ள மகிழ்ச்சியுமே காரணம்.)

– வெங்கட் சுபா

தமிழ் திரைத்துறை