மக்களவை தேர்தல் ஏப்ரல் 11ஆம் தேதி ஆரம்பம்: மே 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை

நாடுமுழுவதும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட மக்களவை தேர்தல் தேதி நேற்று (10-03-2019) அறிவிக்கப்பட்டது. டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தேர்தல் தலைமை ஆணையர் சுனில் ஆரோரா, தேர்தல் ஆணையர்கள் அசோக் லவசா, சுசில் சந்திரா ஆகியோர் கூட்டாக ஊடகங்களுக்கு தேர்தல் தேதி அறிவிப்பை வெளியிட்டனர். அவர்கள் தெரிவித்ததாவது:

முதல்கட்ட வாக்குப்பதிவு: ஏப்ரல் 11ஆம் தேதி – 20 மாநிலங்களில் 91 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது

2ஆம் கட்ட வாக்குபதிவு:  ஏப்ரல் 18ஆம் தேதி – 13 மாநிலங்களில் 97 தொகுதிகளுக்கு நடைபெறுகிறது

3ஆம் கட்ட வாக்குப்பதிவு: ஏப்ரல் 23ஆம் தேதி –  14 மாநிலங்களில் 115 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு

4ஆம் கட்ட வாக்குப்பதிவு: ஏப்ரல் 29ஆம் தேதி –  9 மாநிலங்களில் 71 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு

5ஆம் கட்ட வாக்குப்பதிவு:  மே 6ஆம் தேதி –  7 மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு

6ஆம் கட்ட வாக்குப்பதிவு: மே 12ஆம் தேதி –  7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு

7ஆம் கட்ட வாக்குப்பதிவு: மே 19ஆம் தேதி – 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு

7 கட்ட வாக்குப்பதிவு முடிந்து இறுதியாக வாக்கு எண்ணிக்கை மே 23ஆம் தேதி நடைபெறுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.