மக்களவை தேர்தல்: தமிழகம், புதுவையில் ஏப்ரல் 18ஆம் தேதி வாக்குப்பதிவு

நாடு முழுவதும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தேர்தல் தலைமை ஆணையர் சுனில் ஆரோரா, தேர்தல் ஆணையர்கள் அசோக் லவசா, சுசில் சந்திரா ஆகியோர் கூட்டாக ஊடகங்களுக்கு தேர்தல் தேதி அறிவிப்பை வெளியிட்டனர்.

அதன்படி 2ஆம் கட்டமாக வாக்குபதிவு நடைபெறும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாகும். அதன்படி  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 23ஆம் தேதி நடைபெறுகிறது.

தேர்தல் தேதி விவரம்:

வேட்புமனுத் தாக்கல் ஆரம்பம் மார்ச் 19ஆம் தேதி

வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 26ஆம் தேதி

வேட்பு மனு பரிசீலனை: மார்ச் 27ஆம் தேதி

மனுக்களை திரும்ப பெற கடைசி நாள்: மார்ச் 29ஆம் தேதி

வாக்குப்பதிவு ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறுகிறது.

வாக்கு எண்ணிக்கை மே 23ஆம் தேதி நடைபெறுகிறது.