“திருப்பி அடிக்க முடியாதவர்கள் தயவுசெய்து போராட வேண்டாம்!”

SRINIVASA RAGAVAN: இன்னுமொரு முறை அதிகாரத்தின் அடி உன் உடலில் விழலாகாது.

அப்படி அடிப்பவன் மீது ஆயிரம் அடிகள் விழ வேண்டும்.

திருப்பி அடிக்க முடியாதவர்கள் தயவு செய்து போராட வேண்டாம்.

திருப்பி அடிக்கும் முடிவை எடுக்கும் வரை போராட வேண்டாம்.

மக்கள், பயத்தில் நம்பிக்கை இழந்துவிடுவர்.

காந்திய வழிகளை மக்கள் மறந்துவிட்டனர். லட்சக்கணக்கில் நீ இறந்தாலும் மக்கள் கண்டுகொள்ள மாட்டார்கள்.

எச்சரிக்கை.

மக்களுக்கு நம்பிக்கையை கொடுக்காத எந்த போராட்டமும் சந்தேகத்தோடே பார்க்கப்படும்.

# # #

BADHUR DEEN: திரும்ப அடிப்பது சரியாகுமா…?

# # #

SRINIVASA RAGAVAN: அதிகாரத்தை நிலைநாட்ட வன்முறை பிரயோகிக்கப்படும்போது அதை வன்முறையால் மட்டுமே எதிர்கொள்ள வேண்டும். இல்லை என்றால் பார்வையாளர்களாக நிற்கும் மக்கள் – பயத்தில், போராடும் உணர்வையே இழந்துவிடுவர்.

அடிமைகள் உருவாவது இப்படித்தான்.

ஒடுக்குதல் நடத்தப்பட்டு, சாதிய, சமய, பொருளாதார அதிகாரம் நிறுவப்படுவதும் இப்படியே.

அகிம்சை வழியில் போராட நினைப்பது… மக்கள் தொகை பெருகிப்போன இக்காலத்தே ஆபத்தானது. சில பல கோடி மக்களை கொன்றேனும் அதிகாரம் தன்னை நிலைநிறுத்தும். இதனால் அதற்கு நட்டம் இல்லை. நட்டம் மக்களுக்கே.

ஒரு அடி, ஒரு கொலை என்பது மக்கள் திரளை பணிய வைக்கும் ஆயுதம். அவன் கையில் இருப்பதல்ல ஆயுதம்.

# # #

MUTHUKUMAR VELLAICHAMY: Enemy determines what kind of ammunition you need to take. Unfortunately, here state is the enemy. State is the enemy because it uses it’s force against it’s own people. Problem with INDIANS, we have been taught, Gandhi’s ahimsa got us freedom. The truth is we neither got the freedom nor what we got is because of Gandhi’s struggle.

# # #

JEEVANANDHAM SRINIVASAN: ATLEAST People like you agree that we dint get freedom because of Gandhi. Gandhi is a good but useless person just like us. I strongly believe British fled india because they realised that they could no more control a nation of 30 odd crore people with a meagre 5 or 10 Lakh military personnel. Netaji played a much better role than Gandhi. Netaji had more tolerance for opposite ideas unlike Gandhi who always ignored and insulted extremists.

# # #

GOPAL MOHAN: அடிப்பவன் கண்ணை மூடிக்கொண்டு அடிக்கிறான். அதை பார்ப்பவன் கண்ணை மூடிக்கொண்டு நிற்கிறான். பொதுநலன் கருதி, எல்லோருக்கும் சார்பாக அடிவாங்கி சாகும் தோழர்களே… வேண்டாம், நிறுத்துங்கள் இந்த போராட்ட முறையை.

# # #

ANNA DURAI: தன்னை தாக்குபவர்களை திருப்பித் தாக்க ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு என்று முன்பு தமிழக DGP சொல்லியிருக்கிறார்! அது தமிழக பத்தரிகைகளிலும் பிரசுரிக்கப்பட்டது!

# # #

RAMACHANDRAN CHERAVARAIYAN: தற்காப்புக்காக திருப்பி தாக்குதல் மனித உரிமை. டிஜிபி சொனனாலும், சொல்லாவிட்டாலும் எந்த மனிதனும் கடைபிடிக்கலாம். வேறு விளக்கங்கள் எதுவும் தேவையில்லை.

# # #