“நாங்க அம்போவா? நீங்க அம்போவா?”

திண்டுக்கல்லில் இருக்கிறேன்.

ஒரு நண்பர் நக்கலாக சொன்னார்:

“திண்டுக்கல்லும் உங்களுக்கு அம்போவா தோழர்…”

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டு சான்றிதழ்கள் பெறுவதற்கு அவருக்கு பாலபாரதிதான் உதவியிருந்தார்.

கேட்டேன்:

” நீங்கள் சான்றிதழ் வாங்க சிரமப்பட்டபோது யார் உதவியது?”

“பாலபாரதிதான் சார். ஒரு பைசா செலவில்ல. அவங்களே ஆபீஸ் வந்து வாங்கிக் கொடுத்துவிட்டு ‘வரட்டுமா தோழர்’னுட்டு போய்ட்டாங்களே!”

“சரி, நீங்க சொல்ற மாதிரி நாங்க இங்கு அம்போ ஆயி வேற யாரோ வந்தா என்ன ஆகும்?”

” அலையோ அலைனு அலையனும்.. ஆயிரக்கணக்குல அழுகணும்!”

“இப்ப சொல்லுங்க… நீங்க சொல்றது மாதிரி நடந்தால் நாங்க அம்போவா? நீங்க அம்போவா?”

பேசாமல் போய்விட்டார்.

– இரா.எட்வின்

Read previous post:
0a1w
“மக்களின் தரத்திற்கு தக்கபடியே தான் அரசும் அமையும்!”

200 ரூபாய் பணத்திற்கும், ஒரே ஒரு பிரியணி பொட்டலத்திற்கும் வறண்ட நாக்கோடு கொளுத்தும் கொடும் வெயிலில் உயிரையும் இழக்கத் தயாராகிப்போன ஒரு சமூகத்தில் புரட்சி எங்ஙனம் வெடிக்கும்...?

Close