வன்னியர்குல, கவுண்டர்குல, தேவர்குல (அ)சிங்கங்கள் கவனத்துக்கு…!

வன்னியன்: ஏய், மாப்ள. எங்க சாதி பெண்ணை தலித் சாதி இளவரசன் லவ் செய்த காரணத்துக்காக தலையை வெட்டி தண்டவாளத்தில் போட்டு, அந்த சாதி சனம் வாழ்ற குடிசையைக் கொளுத்தி நாசமாக்கி நாங்க ஆண்ட பரம்பரை என்று நிரூபித்தோம்மில்ல. வன்னிய குல சிங்கமடா நாங்க!

கவுண்டன்: இத பாரு மாப்ள. நீங்க உங்க சாதி பெண்ணை லவ் செய்ததற்காக வெட்டி கொன்னீங்க. ஆனா நாங்க, பேசிக்கிட்டிருந்த ஒரே காரணத்துக்காக தலித் சாதி கோகுல்ராஜ் தலையை வெட்டி தன்டவாளத்துல போட்டோமில்ல. நாங்க தாண்டா ஆண்ட பரம்பரை. கவுண்ட குல சிங்கமடா நாங்க!

தேவன்: அட நீ போ மாப்ள. எங்க சாதி பெண்ணை தலித் சாதி சங்கர் லவ் செய்து குடும்பம் நடத்தின ஒரே காரணத்துக்காக வஞ்சம் வச்சு 8 மாதம் கழிச்சு தேடிவந்து வெட்டிக் கொன்ன நாங்க தாண்டா ஆண்ட பரம்பரை. தேவ குல சிங்கம்டா நாங்க!

டாக்டர் (சாதிவெறி, மனநோயாளி, குடிசை கொளுத்தி) ராமதாஸ்: எவ்ளோ முக்கியமான செய்திகள் சொல்லியிருக்கேன். மொதல்ல இதப் போடுங்க; பிறகு உடுமலை சங்கர் படுகொலை பற்றி பேசலாம்.

மண்ணாங்கட்டி: உங்க சாதி அருவா வெட்டினா தான் வெட்டுமா? தலித் சாதி அருவா வெட்டினா வெட்டாதாடா சாதி மனநோய் பிடித்த மிருகங்களா…? இன்னும் எவ்வளவு நாளைக்கு பேண்ட பரம்பரை பெருமை பேசப் போறீங்களோ…? உங்க ஆண்ட பரம்பரை பெருமையை அடியோடு வெட்டிச் சாய்க்க தலித் இளைஞர்கள் வெகுண்டெழுகிற காலம் வெகுதூரத்தில் இல்லை.

– பாஸ்கர்.என்

0a1r