மீனவர் பிரச்சனைக்கு குரல் கொடுக்காத ஜெ.தீபாவுக்கு படகு சின்னம்!

ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து சசிகலா அணி, ஓ.பி.எஸ். அணி, தீபா அணி என்று அ.திமு.க.வினர் 3 அணிகளாக பிரிந்து கிடக்கிறார்கள்.

நடைபெற இருக்கும் சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அ.தி.மு.கவின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதை அடுத்து, சசிகலா அணி சார்பில் போட்டியிடும் டி.டி.வி.தினகரனுக்கு தொப்பி சின்னத்தையும், ஓ.பி.எஸ். அணி சார்பில் போட்டியிடும் மதுசூதனனுக்கு இரட்டை விளக்கு மின்கம்பம் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஏற்கெனவே ஒதுக்கியுள்ளது.

இந்நிலையில், அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராகக் கூட இல்லாமல், அதிமுகவை கைப்பற்றுவேன், இரட்டை இலையை மீட்பேன் என்று பிதற்றித் திரிந்த ஜெ.தீபா இந்த தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவருக்கு படகு சின்னம் இன்று ஒதுக்கப்பட்டுள்ளது

மீனவர் பிரச்சனைக்குக் கூட குரல் கொடுக்காமல், நியூஸ் சேனல்களில் மட்டும் அவ்வப்போது தோன்றி நடித்துவரும் ஜெ.தீபா, ஆர்.கே.நகர் மீனவர்கள் நிறைந்த பகுதி என்பதாலும், அவருடைய தந்தை இறால் ஏற்றுமதி தொழில் செய்தவர் என்பதாலும், படகு சின்னத்தை விரும்பி தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

பண வெறியும், பதவி வெறியும் பிடித்தலையும் தீபாவுக்கு ஆர்.கே.நகர் மீனவ மக்கள் பாடம் புகட்டுவார்களா?