பூனை வெளியே வருகிறது: ரஜினியுடன் அர்ஜூன் சம்பத் கும்பல் சந்திப்பு!

மத நல்லிணக்கத்தை கட்டிக் காத்து வரும் தமிழகத்தில் எப்படியாவது மத மோதலை உருவாக்கிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டி, வன்முறை வெறியாட்டம் நடத்திவரும் இந்து மக்கள் கட்சியின் தலைவர்கள், நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துப் பேசினார்கள்.

சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினி இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், இந்து மக்கள் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத், மாநில பொதுச்செயலாளர் இராம.ரவிக்குமார், இளைஞரணி மாநில பொதுச்செயலாளர் டி.குருமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன் சம்பத், “ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அரசியலுக்கு வருவது குறித்து ஆலோசித்து வருவதாக ரஜினி கூறினார். அதற்கான ஏற்பாடுகளை ரஜினி செய்து வருகிறார். நாட்டு மக்களுக்கு சேவை செய்வதே ரஜினியின் எண்ணம். ரஜினி சிங்கமாக, சிங்கிளாக அரசியலுக்கு வருவார். அவரது தலைமையில் கூட்டணி அமைத்து, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்” என்றார்.

ரஜினி கட்சியுடன் அர்ஜூன் சம்பத்தின் இந்து மக்கள் கட்சி கூட்டணியா…! வெளங்கிடும்…!!

 

 

 

Read previous post:
0
சட்டப் பேரவையில் இருந்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. வெளிநடப்பு! தி.மு.க. வரவேற்பு!!

தமிழக சட்டப்பேரவையில் இருந்து ஆண்டிபட்டி தொகுதி எம்.எல்.ஏ.வும், டிடிவி.தினகரன் ஆதரவாளருமான தங்க தமிழ்செல்வன் வெளிநடப்பு செய்தார். அவரது வெளிநடப்புக்கு, தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் மேசையை தட்டி ஆதரவு தெரிவித்தார்கள்.

Close