மாதவன் – விஜய் சேதுபதி நடிக்கும் ‘விக்ரம் வேதா’ படப்பிடிப்பு துவங்கியது!

தமிழ் படம்’, ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘வாயை மூடி பேசவும்’, ‘இறுதி சுற்று’ போன்ற படங்களை ஒய்நாட் ஸ்டூடியோஸ் சார்பில் தயாரித்தவர் சசிகாந்த். இவர் ‘ஓரம் போ’, ‘வா’ போன்ற படங்களை இயக்கிய புஷ்கர் – காயத்ரி எழுதி இயக்கும் ‘விக்ரம் வேதா’ என்ற புதிய படத்தை தயாரிக்கிறார்.

இப்படத்தில் ஆர்.மாதவன் – விஜய் சேதுபதி ஆகிய இருவரும் முதல் முறையாக இணைந்து கதாநாயகர்களாக நடிக்க, இவர்களுடன் கதிர், வரலட்சுமி, “யு டர்ன்” புகழ் ஷ்ரதா ஸ்ரீநாத், பிரேம், அச்சுயுத் குமார், ‘ஆண்டவன் கட்டளை’ புகழ் ஹரீஷ் பெரடி, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

முழுக்க முழுக்க ஆக்ஷன் திரில்லராக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்கி தொடர்ந்து நடைபெறுகிறது. இப்படத்தை உலகமெங்கும் ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் சார்பாக ஆர்.ரவீந்திரன் வெளியிடுகிறார்.

ஒளிப்பதிவு – பி.எஸ்.வினோத்

இசை – சாம் சி.எஸ்.

வசனம் – மணிகண்டன்

பாடல்கள் – முத்தமிழ்

நடனம் – கல்யாண்

படத்தொகுப்பு – ரிச்சர்ட் கெவின்

கலை – வினோத் ராஜ்குமார்

சண்டை பயிற்சி – திலிப் சுப்பராயன்

மக்கள் தொடர்பு – நிகில்

நிர்வாக தயாரிப்பு – சக்ரவர்த்தி ராமசந்திரா

தயாரிப்பு மேற்பார்வை – முத்துராமலிங்கம்