சாயம்போன மோடி அரசு சொல்லுகிறது: சாயம் போனால் தான் ரூ.2000 நல்ல நோட்டாம்!

நரேந்திர மோடி அரசு புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ள ரூ.2000 நோட்டு மிக மட்டமான தரத்தில், பார்க்க ரொம்ப கேவலமாக இருப்பதாக சமூக வலைத்தள பதிவர்கள் காறி உமிழ்ந்து வருகிறார்கள். “பழைய பூடான் லாட்டரி சீட்டை விட கேவலமாக இருக்கிறது புதிய ரூ.2000 நோட்டு” என்றும், “நிஜாம் பாக்குத் தூள் பாக்கெட் இன்ஸ்பரேஷனில் ரூ.2000 நோட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது” என்றும் அவர்கள் விமர்சிக்கிறார்கள்.

0a1

இந்நிலையில், புதிய ரூ.2000 நோட்டுகளை தண்ணீரில் நனைத்தாலோ அல்லது ஈரமான பஞ்சு அல்லது துணி கொண்டு தேய்த்தாலோ சாயம் போவதாக அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்று வெளியானது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

இது குறித்து கேட்டதற்கு, “ஆமாம், தண்ணீர் பட்டால் புதிய 2000 ரூபாய் நோட்டு சாயம் போகத் தான் செய்யும். அப்படி சாயம் போனால் தான் அது நல்ல நோட்டு; சாயம் போகாவிட்டால், அது கள்ள நோட்டு’” என மோடி அரசின் பொருளாதார விவகாரத் துறை செயலர் சக்தி காந்த தாஸ் டெல்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) விளக்கமளித்தார்.

“ரூ.2000 நோட்டுகளில் சாயம் போவதற்குக் காரணம் அதனை அச்சிட பயன்படுத்தப்படும் மை. சாயம் போனால் அது நல்ல நோட்டு. போகாவிட்டால் அது கள்ள நோட்டு என்பதற்கான அடையாளம இது” என்றார் அவர்.

மக்கள் விரோத நடவடிக்கைகள் காரணமாக சாயம்போய் பல்லிளித்துக் கொண்டிருக்கும் நரேந்திர மோடி அரசு, சாயம் போகக்கூடிய தரத்தில் தானே ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும். இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது…?