“நபிகள் நாயகத்தின் பொன்மொழி தான் ‘அனிருத்’ படத்தின் கதைக்கரு!”

சித்தாரா எண்டர்டைன்மெண்ட்ஸ் வழங்க,  சுவாதி வர்ஷினியின் பத்ரகாளி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் பத்ரகாளி பிரசாத், இணை தயாரிப்பாளர்கள் சத்யசீத்தால, வெங்கட்ராவ் ஆகியோர் தயாரிக்கும் படம் ‘அனிருத்’.

பத்ரகாளி பிலிம்ஸ் ஏற்கனவே ‘செல்வந்தன்’, ‘பிரபாஸ் பாகுபலி’, ‘இது தாண்டா போலீஸ்’, ‘மகதீரா’, ‘புருஸ்லீ’, ‘எவண்டா’ உட்பட ஏராளமான படங்களைத் தயாரித்து   வெளியிட்டிருக்கிறது.

தெலுங்கில் ‘பிரம்மோற்சவம்’ என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படமே தமிழில் ‘அனிருத்’ என்ற பெயரில்  தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த படத்தில் மகேஷ் பாபு நாயகனாக நடித்துள்ளார். நாயகிகளாக காஜல் அகர்வால், சமந்தா, பிரனிதா ஆகியோர் நடித்துள்ளார்கள். இவர்களுடன் சத்யராஜ், நாசர், ரேவதி, ஷாயாஜி ஷிண்டே, ஜெயசுதா, முகேஷ் ரிஷி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

‘அனிருத்’ படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் படக்குழுவினரும், திரையுலக பிரபலங்களும் கலந்துகொண்டார்கள்.

0a1d

இப்படம் பற்றி இதன் வசனகர்த்தாவும், ஒருங்கிணைப்பாளருமான ஏ.ஆர்.கே.ராஜராஜா கூறியதாவது:-

உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களும் உறவுகளாலும், அன்பினாலும்  பின்னப்பட்டது தான். அத்தகைய குடும்ப உறவுகளை மையமாக வைத்து வெளியாகும் படங்களுக்கு ரசிகர்களிடையே எப்போதும் வரவேற்பு இருக்கும்.

‘தனது உறவுகள் பசித்திருக்க அடுத்தவர்க்கு தானம் செய்வதை விட மோசமான காரியம் வேறேதும் இல்லை’ என்ற நபிகள் நாயகத்தின் பொன்மொழி தான்  இந்த படத்தின் கதைக்கரு.

நம் மீது அன்பு செலுத்தி, நம்  அருகிலேயே  இருக்கும் உறவுகளை நாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் அவர்கள் நம்மைவிட்டுப் போனபிறகு அவர்களை நினைத்து வருத்தப்படுவோம். அப்படி அன்பான ஒரு  உறவை  இழந்த நாயகன், தனது ஏழு தலைமுறை உறவுகளையும் தேடி கண்டுபிடிப்பது தான் படத்தின் திரைக்கதை.

தீபாவளி, பொங்கல் என அனைத்து பண்டிகைகளில் வரும் சந்தோசம்  மொத்தமாக ஒரே நேரத்தில் வந்தால் எப்படி இருக்குமோ, அப்படி குடும்பத்தில் உள்ள அனைவரும் நெகிழ்வோடு பார்க்ககூடிய படம் இது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஒளிப்பதிவு – ரத்னவேலு

இசை – மிக்கி ஜே.மேயர்

பாடல்கள் – கம்பம் கர்ணா, பாசிகாபுரம் வெங்கடேசன், அம்பிகா குமரன், திருமலை சோமு, முருகானந்தம், யுவகிருஷ்ணா, குலராஜா

இணை தயாரிப்பு – சத்யசீத்தால, வெங்கட்ராவ்

தயாரிப்பு – பத்ரகாளி பிரசாத்

இயக்கம் – ஸ்ரீகாந்த்

வசனம் மற்றும் ஒருங்கிணைப்பு – ஏ.ஆர்.கே.ராஜராஜா

ஊடகத்தொடர்பு – மௌனம் ரவி

0a1e

 

Read previous post:
0a1d
பிரபு தேவாவின் ‘களவாடிய பொழுதுகள்’ இம்மாதம் ரிலீஸ்!

‘களவாடிய பொழுதுகள்’ திரைப்படத்தின் படக்குழு சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- கலை என்பது மக்களுக்கானது. மக்களின் நெஞ்சங்களை விட்டு என்றைக்கும் நீங்காத திரைப்படங்கள் எப்பொழுதாவது ஒன்று அரிதாகவே

Close