அரவிந்த்சாமி – திரிஷா இணையும் புதிய படம்  ‘சதுரங்க வேட்டை – 2’

2014-ம் ஆண்டு மனோபாலா பிக்சர் ஹவுஸ் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் நட்ராஜ் நடித்து வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற படம் ‘சதுரங்க வேட்டை’.

நம்மை சுற்றி நமக்கே தெரியாமல் நம் அறியாமையை பயன்படுத்தி எவ்வாறெல்லாம் நம்மை ஏமாற்றுகிறார்கள் என்பதை தெளிவாகவும் வியக்கும்படியும் ‘சதுரங்க வேட்டை’ படத்தில் கூறியிருந்தார்கள். முற்றிலும் தென்மாவட்டங்களில் நடைபெறும் ஏமாற்று வேலைகளை பற்றி விவரித்தது இப்படம்.

தற்போது தினம் தினம் மெருகேறியவரும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நகர்வாழ் மக்களை தங்களது சிலந்தி வலையில் சிக்க வைத்து எவ்வாறு ஏமாற்றுகிறார்கள் என்பதை மிக தெளிவாகவும் விவரமாகவும் ‘சதுரங்க வேட்டை 2’ படத்தில் கூறவுள்ளார்கள்.

மனோபாலாவின் மனோபாலா பிக்சர் ஹவுஸ் இப்படத்தை தயாரிக்கிறது. ‘சதுரங்க வேட்டை’ படத்தை இயக்கிய ஹெச்.வினோத் ‘சதுரங்க வேட்டை 2’ படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறார். ‘சலீம்’ படத்தை இயக்கிய என்.வி.நிர்மல்குமார் இப்படத்தை இயக்குகிறார்.

அரவிந்த்சாமி கதாநாயகனாகவும், திரிஷா கதாநாயகியாகவும் நடிக்க, இவர்களுடன் நாசர், ராதாரவி, ஸ்ரீமன், பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவு – வெங்கடேஷ்

இசை – அஷ்வின் விநாயகமூர்த்தி

படத்தொகுப்பு – ராஜா சேதுபதி

பாடல்கள் – அறிவுமதி, யுகபாரதி

ஊடகத் தொடர்பு – நிகில்