“கொல்லப்பட்டவர் சுவாதியை கொன்ற மணி இல்லை”: தமிழச்சி விளக்கம்

பிரான்ஸில் வசிக்கும் தமிழச்சி என்ற சமூக செயல்பாட்டாளர், சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிக் கொல்லப்பட்ட சுவாதியின் கொலை வழக்கு தொடர்பாக பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை தனது முகநூல் பக்கத்தில் வெளிட்டு வருகிறார்.

தமிழச்சி நேற்று (வியாழக்கிழமை) பதிவிட்ட பதிவில், “சுவாதி படுகொலை வழக்கு விசாரணையில் இருந்த ராம்குமார் காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட அன்று, சுவாதியை கொன்றவர்களில் ஒருவரான ‘மணி’ என்பவர் குறித்த தகவல்கள் எழுதி இருந்தேன். அவர் கூடிய விரைவில் கொல்லப்படுவார் என்றும் குறிப்பிட்டிருந்தேன். அதேபோல் இன்று காலை அவர் கொல்லப்பட்டிருக்கிறார். உடல் அடையாளம் தெரியவில்லை என்கிறார்கள். ஆனால் தலை மொட்டையாக இருந்தால் நிச்சயம் மணி தான்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இது பல இணையதளங்களிலும், சமூக வலைதளங்களிலும் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், தமிழச்சி இன்று (வெள்ளிக்கிழமை) பதிவிட்டுள்ள பதிவில், “தற்போதைய தகவல் (23.09.2016). கொல்லப்பட்ட நபர் மணி இல்லை. இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்தவர்” என கூறியுள்ளார்.