தமிழ் உள்ளிட்ட 4 மொழிகளில் ரீமேக் ஆகிறது ‘சாய்ராட்’

டீன்-ஏஜ் காதலையும், சாதி ஆணவக் கொலையையும் மையமாகக் கொண்ட கதையமைப்புடன் மராத்தியில் வெளியாகி ரூ.100 கோடிக்கு மேல் வசூலை வாரிக் குவித்துள்ள ‘சாய்ராட்’ படம் விமர்சகர்களின் ஏகோபித்த பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

நாகராஜ் மஞ்சுளே இயக்கியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு தென்னிந்திய மொழிகளில் ரீமேக் ஆகிறது. இந்த ரீமேக் உரிமையை கடும் போட்டிக்கு இடையே வாங்கியிருக்கிறார் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ்.

நடிகர் – நடிகைகள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு விரைவில் தொடங்க இருப்பதாகவும், ஆகஸ்டு மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் ராக்லைன் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.