முக்தா சீனிவாசன் காலமானார்

பிரபல திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குனருமான முக்தா சீனிவாசன், உடல்நலக் குறைவு காரணமாக இன்று (29-05-2018) இரவு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 89.

சிவாஜி கணேசன்  நடித்த ‘அந்தமான் காதலி’, ரஜினிகாந்த் நடித்த ‘பொல்லாதவன்’,  ஜெயலலிதா – முத்துராமன் நடித்த ‘சூரியகாந்தி’  உட்பட ஏராளமான படங்களை இயக்கி, தயாரித்தவர் முக்தா சீனிவாசன். அவர் சுமார் 70 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் செயலாற்றி வந்தவர்.

 முக்தா சீனிவாசனின் மனைவி பிரேமா. இத்தம்பதியருக்கு முக்தா சுந்தர், முக்தா ரவி என்ற மகன்களும், மாயா என்ற மகளும் உள்ளனர்.

முக்தா சீனிவாசனின் உடல் சென்னை தியாகராயர் நகர், வைத்திய ராமன் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

 

 

Read previous post:
0a1c
‘காலா’ படத்தை வெளியிட கர்நாடக மாநிலத்தில் தடை!

ரஜினிகாந்த் நடிப்பில், தனுஷ் தயாரிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘காலா’. இப்படம் வருகிற (ஜூன்) 7ஆம் தேதி திரைக்கு வருகிறது. லைக்கா நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.

Close