‘காலா’ படத்தை வெளியிட கர்நாடக மாநிலத்தில் தடை!

ரஜினிகாந்த் நடிப்பில், தனுஷ் தயாரிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘காலா’. இப்படம் வருகிற (ஜூன்) 7ஆம் தேதி திரைக்கு வருகிறது. லைக்கா நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.

ஆனால், கர்நாடக மாநிலத்தில் இப்படத்தை வெளியிட எதிர்ப்புக் கிளம்பியுள்ளதால், இப்படத்துக்கு அம்மாநில திரைப்பட வர்த்தக சபை தடை விதித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ரஜினிகாந்த், காவிரி பிரச்சனையில் சுயநல அரசியல் ஆதாயத்துக்காக தமிழ்நாட்டுக்கு ஆதரவாக கருத்துக் கூறி வருவதால், அவரது படங்களை கர்நாடக மாநிலத்தில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று கன்னட அமைப்புகள் கூறிவருகின்றன. இந்நிலையில், கர்நாடக மாநில நலன் கருதி ‘காலா’ படத்திற்கு தடை விதிக்கப்படுவதாக கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் சாரா கோவிந்த் அறிவித்துள்ளார்.

Read previous post:
0a1b
“காலா’ ரிலீசாகும் நாளிலேயே இணையதளத்தில் வெளியிடுவோம்”: ‘தமிழ் ராக்கர்ஸ்’ அறிவிப்பு!

ரஜினிகாந்த் நடிப்பில், தனுஷ் தயாரிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘காலா’. இப்படம் வருகிற (ஜூன்) 7ஆம் தேதி உலகெங்கும் திரைக்கு வருகிறது. லைக்கா நிறுவனம் இப்படத்தை

Close