“ஆர்.கே.நகரில் விஜய் மக்கள் இயக்கம் ஆதரவு யாருக்கும் இல்லை!” – எஸ்.ஏ.சி.

“விஜய் மக்கள் இயக்கம் சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்காது” என்று நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் அறிவித்துள்ளார்..

கன்னியாகுமரியில் தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற எஸ்.ஏ.சந்திரசேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் விஜய்யை அரசியலுக்கு கொண்டு வர நான் விரும்பினேன். நடிகர் என்பதால் அரசியலில் புகழ் பெற முடியும் என எண்ணினேன். காலப்போக்கில் அரசியல் சுத்தம் செய்ய முடியாத சாக்கடை என்பதை உணர்ந்தேன்.

தற்போதைய நிலையில் தமிழகத்தில் மிகவும் மோசமான அரசியல் சூழல் உள்ளது. இது போன்ற கட்டத்தில் எனது மகனை (விஜய்) அரசியலுக்கு கொண்டு வர நான் விரும்பவில்லை. அவர் அரசியலுக்கு வர மாட்டார்.

விஜய் மக்கள் இயக்கம் சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

 

Read previous post:
0
“என்னை படுக்கைக்கு அழைத்தார் தமிழ் திரைப்பட இயக்குனர்!” – லேகா வாஷிங்டன் புகார்

"பட வாய்ப்பு தருவதற்கு என்னை படுக்கைக்கு அழைத்தார் தமிழ் திரைப்பட இயக்குனர்” என்று நடிகை லேகா வாஷிங்டன் புகார் கூறியுள்ளார். திரையுலகில் தங்களுக்கு பாலியல் தொல்லைகள் இருப்பதாக

Close