அட்லீ இயக்கும் புதிய படம்: ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது!

தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் எதிர்த்ததால் வெற்றிப்படமாக மாறிப்போன ‘மெர்சல்’ படத்தை இயக்கிய அட்லீ, அடுத்து இயக்கும் படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று (நவம்பர் 14) வெளியிடப்பட்டது.

இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராகவும், ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணுவும் பணிபுரிய ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

சண்டை வடிவமைப்பாளராக அனல் அரசு, பாடலாசிரியராக விவேக், எடிட்டராக ரூபன், கலை இயக்குநராக முத்துராஜ் ஆகியோர்  பணிபுரிய உள்ளார்கள் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்த தொழில்நுட்பக் கூட்டணி அப்படியே ‘மெர்சல்’ படத்தில் பணிபுரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நாயகனாக விஜய் நடிக்கிறார். நாயகி, வில்லன் உள்ளிட்ட ஏனையோர் பற்றி அறிவிக்கப்படவில்லை. ஆனால், அடுத்த ஆண்டு (2019) தீபாவளிக்கு இப்படம் ரிலீஸாகும் எனபது  அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read previous post:
0a1a
பாலிவுட் படத்துக்காக வட மாநில பழங்குடியினர் கிராமங்களில் தகவல் சேகரிக்கும் பா.இரஞ்சித்!

“காலா” திரைப்படத்திற்கு அடுத்ததாக இயக்குநர் பா.இரஞ்சித் பாலிவுட் திரைப்படம் ஒன்றை இயக்குவதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். “நமா பிக்சர்ஸ்” மிக பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கும் இத்திரைப்படம், ஆங்கிலேய

Close