பொங்கலுக்கு வெளியாகிறது கார்த்திக் சுப்பராஜின் ‘பேட்ட’: அதிகாரபூர்வ அறிவிப்பு!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிரூத் இசையமைப்பில் உருவாகிவரும் படம் ‘பேட்ட’. இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், விஜய் சேதுபதி, சிம்ரன், பாபி சிம்ஹா, த்ரிஷா, சனந்த் ரெட்டி, சசிகுமார், மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என பலர் நடித்திருக்கிறார்கள்.

வருகிற பொங்கலுக்கு ‘பேட்ட’ படத்தோடு, அஜித் நடிக்கும் ‘விஸ்வாசம்’, சிம்பு நடிக்கும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’, ஜீ.வி.பிரகாஷ் நடிக்கும் ‘வாட்ச்மேன்’ ஆகிய 4 படங்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஆனால், இத்தனை படங்களுக்கும் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால், கடைசி நேரத்தில் ஒன்றிரண்டு படங்களின் வெளியீடு தள்ளிப்போக வாய்ப்பு இருக்கிறது.

 

Read previous post:
0a1a
அட்லீ இயக்கும் புதிய படம்: ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது!

தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் எதிர்த்ததால் வெற்றிப்படமாக மாறிப்போன ‘மெர்சல்’ படத்தை இயக்கிய அட்லீ, அடுத்து இயக்கும் படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான அதிகாரபூர்வ

Close