‘பவர் பாண்டி’யில் சிறுவயது ராஜ்கிரணாக நடிக்கிறார் தனுஷ்!

ராஜ்கிரண் நடிப்பில் உருவாகி வரும் ‘பவர் பாண்டி’ படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார் நடிகர் தனுஷ். அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் நிறுவனம் தயாரித்துவரும் இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்து வருகிறார்.

பிரசன்னா, சாயா சிங் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

ஸ்டண்ட்மேன் ஒருவர் பற்றிய கதை தான் ‘பவர் பாண்டி’. இக்கதையில் ராஜ்கிரணின் சிறுவயது கதாபாத்திரத்தில், கௌரவ வேடத்தில் தோன்ற இருக்கிறார் தனுஷ்.

‘பவர் பாண்டி’ படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்க திட்டமிட்டு இருக்கிறார் தனுஷ். தற்போது சென்னையில் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.

Read previous post:
0a1
“விக்ரமும் விஜய்சேதுபதியும் எனக்கு ரோல்மாடல்!” – ‘மியாவ்’ ஹீரோ சஞ்சய்

சிவகார்த்திகேயன், மாகாபா ஆனந்த் ஆகியோர் விஜய் டிவியில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்திருக்கிறார்கள் என்றால், சன் டிவியிலிருந்து வந்திருக்கிறார் சஞ்சய். சன் டிவியில் விஜே-வாக இருந்த இவர், ‘மியாவ்’

Close