‘ரேணிகுண்டா’ இயக்குனர் பன்னீர்செல்வம் படத்தில் விஜய்சேதுபதி!

‘ரேணிகுண்டா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பன்னீர்செல்வம். விமர்சகர்களால் பாராட்டப்பட்ட அப்படத்தை அடுத்து ’18 வயசு’ படத்தை இயக்கினார். அவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார்.

தற்போது அக்கதையில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் பன்னீர்செல்வம். “விஜய் சேதுபதி நடிப்பது உறுதியாகிவிட்டது. ஆனால், அவர் இன்னும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை” என்று படக்குழுவுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள்.

ஏ.எம்.ரத்னம் தயாரிக்கவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பை அடுத்தாண்டு துவக்கத்தில் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இப்படத்துக்கான நடிகர் – நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

Read previous post:
0a1
‘பவர் பாண்டி’யில் சிறுவயது ராஜ்கிரணாக நடிக்கிறார் தனுஷ்!

ராஜ்கிரண் நடிப்பில் உருவாகி வரும் 'பவர் பாண்டி' படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார் நடிகர் தனுஷ். அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் நிறுவனம் தயாரித்துவரும்

Close