உறியடி 2 -விமர்சனம்

எல்லா சம்பவங்களையும் வெறும் தினச் செய்திகளாகவே கடந்து செல்லும் சமகால சூழலில், மக்களைக் கொன்று தின்னும் பெருமுதலாளிகளின் கோரமுகத்தினை உக்கிரமாய் பதிவு செய்கிறது உறியடி2.

தேர்தல் சமயத்தில் இப்படியொரு படைப்பு அவசியமானதே.

சமூக பொறுப்புமிக்க படைப்பாளியாக, தன்னால் இயன்றவரை இயக்குனர் விஜய் குமார் தனது பங்களிப்பை செலுத்தியிருக்கிறார்.

உலகமயம், தனியார்மயம், தாராளமயம் என்ற மக்களுக்கெதிரான கொள்கைகளால், அரசின் துணையோடு, முதலாளித்துவ இனம் எவ்வளவு அட்டூழியங்களை பொழுதுபோக்காக செய்து கொழுக்கிறது என்று உணரவைப்பதில் உறியடி2 வின் முயற்சி வரவேற்கவேண்டிய ஒன்று.

படம் கடந்தகால நிகழ்வுகளை நினைவூட்டினாலும் இதுதான் எல்லா முதலாளிகளின் சுயரூபம்.

முதலாளிகளின் அயோக்கியத்தனங்களால் இந்த தேசம் விரைவில் பல இன்னல்களை சந்திக்க காத்திருக்கிறது. அதற்கான எச்சரிக்கை மணி உறியடி2.

இதுபோன்ற கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்க பெரிய நடிகர்கள் முன்வரவேண்டியது மிக அவசியமானது. அரசியலில் நாம் தலையிடாவிடில், அரசியல் நம் வாழ்வில் தலையிடும். அப்படி தலையிட்டால் அது எதிர்கால தலைமுறைகளையே பாழாக்கும். அனைவரும் அவசியம் காண வேண்டிய படைப்பு.

படைப்பில் துணை நின்ற அனைவருக்கும் அன்பும் வாழ்த்துகளும்.

ஜெபி.தென்பாதியான்