சர்ச்சை: காயத்ரி பொய்யை அம்பலப்படுத்த ‘நைட் வீடியோ கிளிப்’பை போடாதது ஏன்?

ஓகே… என்னதான் பிக் பாஸ் உண்மைய வெளிச்சம் போட்டுக் காட்றேன்னு ஜுலிய அம்பலப்படுத்தினாலும், அவ ஒரு சாஃப்ட் டார்கெட் தான். மெயின் பிக்சர் காயத்ரி தான்.  தொக்கா புடிக்க வாய்ப்பிருந்தும்,  மத்தவங்கள ஃபோகஸ் பண்ணி ரெண்டு மூணு வாட்டி காயத்ரிய நைஸா நழுவ விட்டாங்க. அதுவும் இன்னைக்கு பச்சையா!

‘நாங்க கேசுவலா பாடுனோம். ஓவியாவ மீன் பண்ணல”னு காயு (த்தூ) திரும்பத் திரும்ப புளுவுனப்போ, டக்குனு அன்னைக்கு நைட் வீடியோ க்ளிப்ப போட்ருந்தா கிழிஞ்சுருக்கும்.

அதுவும் ஓவியா ஆண்கள் ரூமுக்கு போனதும், “இன்னைக்கு அவ எப்படி தூங்குறான்னு பாப்போம்”, “அவ திரும்பி வந்ததும் கண்டிப்பா மறுபடியும் பாடுறோம்”னு சொன்னதலாம்  கேமிரால பதிவாச்சே… பின்ன ஏன் அதெல்லாம் போடல தலிவரே?

நடக்காதத நடந்துச்சுனு சொல்றது Hallucination னா, நடந்தத நடக்காத மாதிரி கண்டுக்காம வுடறதுக்கு பேர் என்ன…?

JEYACHNDRA HASHMI