எச்சரிக்கை: ஜூலியை நீங்கள் தற்கொலை முயற்சிக்கு தூண்டிக் கொண்டிருக்கிறீர்கள்!

இது #BiggBoss பத்தி தான். நீங்கள் எல்லாரும் அறிந்தும் அறியாமலும் செய்துகொண்டிருக்கும் பெருங்குற்றம் பற்றியது.

The difference between a celebrity and a commoner is the “thick skin”.

பிக்பாஸ், வெளியுலக தொடர்பு இல்லாமல் இருப்பவர்களின் அந்தரங்க உரையாடல்களை படம் போட்டு காட்டுகிறது. இதில் சாமானியர்களின் கூட்டத்தில் இருந்து வந்துள்ளது ஜூலி மட்டும் தான். இங்கு சிலர் அந்த பெண்ணை பற்றி எழுதும் வக்கிரமான, கேவலமான பதிவுகளை எல்லாம் மீறியும் ஒன்றை கவனத்தில் கொள்ளுங்கள்.

மற்றவர்களைப் போல அல்லாமல், இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதும் ஜூலி மட்டும் தான் உங்களைப் போல ஆட்டோவிலும், பஸ்ஸிலும் பயணிக்கப் போகிறாள். தெருவில் நடந்து போகப் போகிறாள். அப்போது நீங்கள் இங்கே எழுதியதைப் போலவே பலரும் அவள் காது படவே அவளைப் பற்றி இழிவாகப் பேசப் போகிறார்கள்.

ஐந்து மாதங்களாக ஒரு சமூகநலம் மிக்க போராளி போல காட்டப்பட்டு பெருமையாக வலம்வந்த பெண், தன்னைப் பற்றி உலகத்திடம் நேரெதிரான பார்வை பரப்பப்படுகிறது என்பதை அறிவாளா என்று தெரியாது.

அப்படி நிகழ்ச்சி முடிந்து வெளியேறும்போது சரியாக ஆலோசனை (counseling) வழங்கப்படாமலோ, அவளைப் பற்றிய சித்தரிப்பை மாற்றாமலோ போனால், ஒரு விபரீதம் நடக்க வாய்ப்புள்ளது.

ஒரு வீடியோ பார்த்தேன். “காசு பணத்துக்கு ஆசை பட்டதுக்காக இந்த பேச்செல்லாம் கேட்டுக்கணுமாண்ணே” அப்படின்னு அந்த பொண்ணு கேட்குது.

நீங்களும் உங்களைப் போன்றோரும் அவளை தற்கொலைக்கு தூண்டிக்கொண்டிருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது. நீங்கள் பெருங்குற்றம் செய்கிறீர்கள் என்றும் எனக்கு தோன்றுகிறது.

You are hitting a commoner that lacks the thick skin.

தற்கொலையோ, அதற்கான முயற்சியோ நடக்காதுன்னு மறுக்காதீங்க. அது நடக்கக் கூடாதது தான். நடக்காமல் இருக்குமான்னு தெரியாது.

நடக்கக் கூடாதுன்னா, அதற்காக உங்களில் பலர் வாயை இப்போதே அடக்குவது நல்லது.

KARTHIK RANGARAJAN

 

Read previous post:
0
சர்ச்சை: காயத்ரி பொய்யை அம்பலப்படுத்த ‘நைட் வீடியோ கிளிப்’பை போடாதது ஏன்?

ஓகே... என்னதான் பிக் பாஸ் உண்மைய வெளிச்சம் போட்டுக் காட்றேன்னு ஜுலிய அம்பலப்படுத்தினாலும், அவ ஒரு சாஃப்ட் டார்கெட் தான். மெயின் பிக்சர் காயத்ரி தான்.  தொக்கா

Close