‘பிக்பாஸ்’ புகழ் ஹரிஷ் கல்யாண் – ரெய்சா இணையும்  ‘பியார் பிரேமா காதல்’ 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாண் – ரெய்சா ஜோடியாக நடிக்க, முழுக்க முழுக்க காதல் கதையாக ‘பியார் பிரேமா காதல்’ என்ற படம் உருவாகிறது.

பாகுபலி 2 படத்தை வெளியிட்ட கே புரொடக்‌ஷன்ஸ் சார்பில் எஸ்.என்.ராஜராஜன், ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் சார்பில்  இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா  இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார்கள். இந்த படத்தின் மூலம்  இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தயாரிப்பு துறையில் முதன்முறையாக  கால் பதிக்கிறார்.

மற்ற முன்னணி நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஒளிப்பதிவு           :         ராஜா பட்டாச்சார்யா

இசை                    :         யுவன்சங்கர்ராஜா

கலை                    :         தியாகராஜன்

எடிட்டிங்               :         மணிக்குமரன்

எழுத்து, இயக்கம் – இளன். இவர் பல குறும்படங்களை இயக்கியதுடன் கிருஷ்ணா நடித்து விரைவில் வெளிவர உள்ள ‘கிரகணம்’ என்ற படத்தை இயக்கி இருப்ப்வர்..

 

Read previous post:
0a1d
‘களவாணி மாப்பிள்ளை’ நாயகன் தினேஷ்! 

நம்ம  ஊரு பூவாத்தா, ராக்காயி கோயில், பெரிய கவுண்டர் பொண்ணு, கட்டபொம்மன், நாடோடி மன்னன், மாப்பிள்ளை கவுண்டர் உட்பட 16 படங்களைத் தயாரித்த ராஜபுஷ்பா பிக்சர்ஸ் நிறுவனம்,

Close