‘களவாணி மாப்பிள்ளை’ நாயகன் தினேஷ்! 

நம்ம  ஊரு பூவாத்தா, ராக்காயி கோயில், பெரிய கவுண்டர் பொண்ணு, கட்டபொம்மன், நாடோடி மன்னன், மாப்பிள்ளை கவுண்டர் உட்பட 16 படங்களைத் தயாரித்த ராஜபுஷ்பா பிக்சர்ஸ் நிறுவனம், 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பட தயாரிப்பில் ஈடுபட உள்ளது.

இந்த நிறுவனத்தின் தயாரிப்பாளரான மணிவாசகம் தான் இந்த அனைத்து படங்களையும் இயக்கியவர். அந்த காலகட்டத்தில் வணிக ரீதியான வெற்றி தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் கவனிக்கப்பட்டவர் மணி வாசகம் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் மறைந்து  17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் படத்தயாரிப்பில் ராஜபுஷ்பா பிக்சர்ஸ் களமிறங்குகிறது.

மணிவாசகத்தின் மகனான காந்தி மணிவாசகம் தயாரித்து, இயக்கும் ‘களவாணி மாப்பிள்ளை’ படத்தில் தினேஷ் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகி மற்றும் மற்ற நட்சத்திரங்கள் பற்றி பின்னர் அறிவிக்க உள்ளனர்.

விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது. அப்பாவை பின்பற்றி தயாரிப்பு, இயக்கம் என்று களமிறங்கும் காந்தி மணிவாசகம், கதை அமைப்பிலும், காமெடி, கமர்ஷியல் என்ற அவரது அப்பா பார்முலாவையே கையிலெடுக்கிறார்.

இசை   –  ரகுநந்தன்

 

Read previous post:
0a1d
தீரன் அதிகாரம் ஒன்று – விமர்சனம்

டுபாக்கூர் தொழில் முனைவோரின் ஏமாற்று வேலைகளை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டிய ‘சதுரங்க வேட்டை’ படத்தின் மூலம் வித்தியாசமான இயக்குனராக அறிமுகமான வினோத், ஒரு போலீஸ் அதிகாரி சம்பந்தப்பட்ட

Close