ரஜினியின் ‘2.0’ படத்தின் வில்லன் அக்‌ஷய்குமாரின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமி ஜாக்சன், சுதன்ஷு பாண்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘2.0’. ஷங்கர் இயக்கி வரும் இப்படத்துக்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வருகிறார். ஏ.ஆ.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தை சுமார் 350 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது லைக்கா நிறுவனம்.

முழுக்க 3டி கேமிரா மூலமாக இப்படம் ஒளிப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. ட்ரான்ஸ்பார்மர்ஸ், பியல் ஹார்பர், டை ஹார்டு உள்ளிட்ட வரவேற்பு பெற்ற ஹாலிவுட் படங்களுக்கு சண்டைக்காட்சிகளை வடிவமைத்த கென்னி பேட்ஸ் இப்படத்துக்கு சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.

மும்பையில் சுமார் 6 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. முதலில் இப்படத்தில் வில்லனாக நடித்து வரும் அக்‌ஷய்குமாரின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.

0a1b

அப்போது “அக்‌ஷய்குமாருக்கு மேக்கப் போட்டு தயாராவதற்கு 6 மணி நேரமாகும். இதனால் தினமும் படப்பிடிப்புக்கு 6 மணி நேரத்துக்கு முன்பாகவே வந்துவிடுவார். அவருடைய பொறுமையும், தொழில்முறையும் பாராட்டத்தக்கது” என்று படக்குழு தெரிவித்திருக்கிறது.

இதுவரை ‘2.0’ வெளியீடு எப்போது என்பது தெரியாமலே இருந்தது. அக்‌ஷய்குமார் பர்ஸ்ட் லுக்கில் படக்குழு ‘தீபாவளி 2017’ல் வெளியீடு என்று குறிப்பிட்டு இருக்கிறது. மேலும், 3டியில் இப்படம் வெளியாகும் என்று குறிப்பிட்டு இருக்கிறது படக்குழு

Read previous post:
0a1l
“An Outsider who saw within”: Ganga Rudraiah about her Father Rudraiah

“In the dream that life is, here is man, who finds his truths and loses them on this mortal earth,

Close