‘2.0’ படத்தின் நாயகன் ரஜினியின் ஃபர்ஸ்ட் லுக் கெட்டப்!

ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்ஷய் குமார் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘2.0’. இது முன்னர் ரஜினி – ஷங்கர் கூட்டணியில் வெளியாகி வெற்றி பெற்ற ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். இப்படத்தை  லைக்கா நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இன்று வெளியிடப்பட்டது. இதற்கான வெளியீட்டு விழா மும்பையில் உள்ள யாஷ்ராஜ் ஸ்டுடியோவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

விழா நடைபெற்ற அரங்கத்தின் உள்ளே, சுற்றிலும் எல்.இ.டி. திரை அமைக்கப்பட்டு, அதில் ‘2.0’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் திரையிடப்பட்டன.

இவ்விழாவில், ரஜினி, ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான், அக்ஷய் குமார், ரசூல் பூக்குட்டி, நீரவ் ஷா, ஜெயமோகன் உள்ளிட்ட படக்குழுவினருடன் தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர் ஆர்யா, விஜய் ஆண்டனி உள்ளிட்ட பலரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். மேலும், ஹிந்தி திரையுலக பிரபலங்கள் பலரும் வருகை தந்தனர்.

முதலில், இப்படத்தில் வில்லனாக நடிக்கும் அக்ஷய்குமாரின்  பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. (“ரஜினியின் ‘2.0’ படத்தின் வில்லன் அக்‌ஷய்குமாரின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது” என்ற தலைப்பில் இது பற்றிய செய்தியை தனியே வெளியிட்டுள்ளோம்.)

அதனையடுத்து, ரஜினி எந்திரன் கெட்டப்பில் இருக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.

0a1j

 

இதை தொடர்ந்து ரஜினியும், அக்ஷய்குமாரும் ஒருவரை ஒருவர் சீற்றத்துடன் பார்த்துக்கொண்டிருப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.

0a1d