பா.இரஞ்சித் தயாரிப்பில்  கிரிக்கெட்டை மையமாகக் கொண்ட புதிய  படம்: படப்பிடிப்பு துவங்கியது

பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ், மற்றும் லெமன் லீப் கிரியேசன்ஸ் கணேசமூர்த்தி இணைந்து தயாரிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்குகிறது.

கிரிக்கெட் விளையாட்டை மையமாகக்கொண்ட  இந்த படத்தில் அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ், ப்ரித்வி பாண்டியராஜன் கீர்த்திபாண்டியன் , திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இயக்குனர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜெய்குமார் இந்த படத்தை இயக்குகிறார்.

O2 ,  தம்மம் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய தமிழழகன்  இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

அரக்கோணம்  சுற்றுவட்டார பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடக்கிறது.

தமிழகத்தின் நகரங்கள் , ஊர்களின் கிரிக்கெட் விளையாட்டின் உணர்வுப்பூர்வமான ஒரு வாழ்வியலையும் , நட்பு , கொண்டாட்டங்களையும் ஜனரஞ்சகமாக அனைவரும் ரசிக்கும்படியான கதையமைப்பில் உருவாக்கி இன்று படப்பிடிப்பை துங்குகிறார்கள்.

திரைக்கதை வசனம், – தமிழ்பிரபா மற்றும் ஜெய்குமார்..

இயக்கம் – ஜெய்குமார்.

தயாரிப்பு- லெமன் லீப் கிரியேசன்ஸ் கணேசமூர்த்தி, நீலம் புரொடக்சன்ஸ் பா.இரஞ்சித்.

கலை – ரகு

எடிட்டிங் – செல்வா RK

உடைகள்- ஏகாம்பரம் .

ஸ்டில்ஸ் – ராஜா

பி ஆர் ஓ – குணா