ரஜினிக்கு பி.வி.சிந்து நன்றி: “நானே உங்கள் பரம ரசிகை தான்!”

ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில், இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தார். ஒலிம்பிக் வரலாற்றில் ஓர் இந்திய வீராங்கனை வெள்ளி பதக்கம் வெல்வது இதுவே முதல்முறை.

வெள்ளி பதக்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு இந்தியா முழுவதும் பாராட்டுகள் குவிந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அவரது ட்விட்டர் சமூக வலைதளத்தில் பி.வி.சிந்துவுக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும், பிவி.சிந்துவின் ஆட்டத்தைப் பார்த்து சிந்துவின் ரசிகனாகவே மாறிவிட்டதாகவும் ரஜினிகாந்த் அதில் கூறியிருந்தார்.

ரஜினியின் இந்த ட்விட்டர் தகவல், கோடிக்கணக்கான அவரது ரசிகர்களால் ரீ-ட்விட் செய்யப்பட்டு, உலகம் முழுவதும் பரவியது.

தற்போது ரியோவில் இருக்கும் பி.வி.சிந்துவுக்கு ரஜினியின் ட்விட்டர் தகவல் சென்றடைய, அதை பார்த்து அவர் பெரும் மகிழ்ச்சி அடைந்தார். உடனே ரஜினிக்கு நன்றி தெரிவித்து அவர் பதில் ட்விட் செய்துள்ளார். “மிக்க நன்றி சார்! நானும்கூட உங்கள் பரம ரசிகை தான்” என்று அதில் கூறியுள்ளார் பி.வி.சிந்து.

பி.வி.சிந்துவின் ட்விட்:-

0a6c

 ரஜினி பாராட்டு பற்றி பி.வி.சிந்துவின் அம்மா!

0a6e

சிந்துவை ரஜினி பாராட்டியிருப்பது குறித்து சிந்துவின் அம்மா பி.விஜயா கூறுகையில், “நடிகர் ரஜினிகாந்த், சிந்துவை பாராட்டியதோடு ‘நான் சிந்துவின் ரசிகராக மாறி விட்டேன்’ என்று டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அவர் எவ்வளவு பெரிய மனிதர். மிகப் பெரிய நடிகரான அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கும் நிலையில் எனது மகளின் ரசிகர் என்று அவர் குறிப்பிட்டு இருப்பதை படித்ததும் உண்மையிலேயே நெகிழ்ச்சியில் கண்களில் இருந்து கண்ணீர் வந்துவிட்டது.

“நான் சென்னையில் 18 ஆண்டுகள் இருந்துள்ளேன். எனக்கு நன்கு தமிழ் தெரியும். சிந்து சில வார்த்தைகள் தமிழில் பேசுவார். அதே சமயம் தமிழில் மற்றவர்கள் பேசினால், புரிந்து கொள்வார்” என்றார்.