அவசரம்… ஆணவக் கொலை செய்யப்பட இருக்கும் இந்த பெண்ணை காப்பாற்றுங்கள்!

அவசரம்…

ஆணவ படுகொலை செய்யப்படவிருக்கும் பெண்ணின் உயிரை காக்க உதவுங்கள்…

புதுக்கோட்டை ஆலங்குடி பகுதி பிரியங்கா – வினோத் இருவரும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். வினோத் தலித். இதையறிந்த பிரியங்காவின் பெற்றோர் நேற்று முழுவதும் பிரியங்காவை கட்டிவைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் பிரியங்காவிற்கு தலை மற்றும் கை கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இன்று காலை பிரியங்கா ரகசியமாக இந்த செய்தியை வினோத்திற்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்..

அவரின் கிராமம் ஜாதி ஆதிக்கம் நிறைந்த பகுதி. எங்களால் அங்கு நுழையக்கூட முடியவில்லை.

 பிரியங்கா அவரின் உறவினர்களால் எந்த நேரத்திதிலும் கொலை செய்யப்படலாம்.

 அவரை காப்பாற்ற முடியாத கையறு நிலையில் வெட்கித் தலை குனிகிறோம்….

 ஆகையால், புதுக்கோட்டை பகுதி தோழர்களே, நண்பர்களே, மனிதநேயமிக்கோரே… வாருங்கள்; உதவுங்கள்…

 மா.பா.மணிகண்டன் (மதுரை மாவட்ட செயலாளர் திவிக) 9600 408641, கார்த்திகேயன் (புதுக்கோட்டை மாவட்ட செயலாளர்) 97888 40257

 இந்த செய்தியை அதிகம் பகிருங்கள்l

 – சிபி சந்தர்,

விடுதலை சிறுத்தைகள் கட்சி.

0a3c

0a3d

0a3a

0a3b

Read previous post:
0a1a
மாவோவை ‘ரஷ்ய அதிபர்’ என சொன்னதற்காக வருத்தம் தெரிவித்தார் விஜய்!

விஜய், சமந்தா, எமி ஜாக்சன், நைனிகா, மகேந்திரன், ராஜேந்திரன், பிரபு, ராதிகா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் படம் ‘தெறி’. அட்லீ இயக்க, கலைப்புலி எஸ்.தாணு

Close