’பிகில்’ திரையிடலில் தாமதம்: விஜய் வெறியர்கள் கலவரம்; 37 பேர் கைது!

கிருஷ்ணகிரியில் ‘பிகில்’ படம் திரையிடுவதாக இருந்த திரையரங்கில், திரையிடல் காலதாமதமானதை அடுத்து விஜய்யின் வெறித்தனமான ரசிகர்கள் பயங்கர கலவரத்தில் ஈடுபட்டார்கள். இதில ஐந்துரோடு ரவுண்டானாவில் வைக்கப்பட்டிருந்த சிக்னல்கள், கண்காணிப்பு கேமராக்கள், போலீசாரின் ஒலிபெருக்கிகள், தீபாவளியை முன்னிட்டு போலீசார் அமைத்திருந்த கட்டைகளால் ஆன உயர மேடை ஆகியவை முற்றிலுமாக சேதம் அடைந்தன.

ரவுண்டானாவில் நகராட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டி உடைத்து நொறுக்கப்பட்டது .பல்வேறு கடைகளின் பேனர்கள் கிழித்து எறியப்பட்டன .தீ வைத்து எரிக்கப்பட்டன. சாலையோர வியாபாரிகள் பிழைப்புக்காக வைத்திருந்த பானைகள் மற்றும்  பொருட்களை உடைத்து சேதப்படுத்தினார்கள் .

இதையடுத்து அதிவிரைவு படை போலீசார் அங்கு வந்து விஜய் ரசிகர்களை லேசான தடியடி நடத்திக் கலைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஓசூர் மற்றும் சூளகிரி பகுதியைச் சேர்ந்த 37 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

Read previous post:
b8
விஜய் – நயன்தாரா நடித்துள்ள ‘பிகில்’ படத்தில்…

வருகிற தீபாவளியை முன்னிட்டு இன்று (25ஆம் தேதி) திரைக்கு வரும் விஜய்யின் ‘பிகில்’ படத்தின் ஸ்டில்ஸ்:-

Close