“முதல்வர் உடல்நலம் இவ்வாறிருக்க, என் பிறந்தநாள் விழாவை தவிர்க்கவும்”! – கமல்ஹாசன்

உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு மாதத்துக்கும் மேலாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் தன் பிறந்த நாளான நவம்பர் மாதம் 7ஆம் தேதி, பிறந்தநாள் விழா எதுவும் கொண்டாட வேண்டாம் என்று தனது ரசிகர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக கமல் இன்று வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், ”நற்பணி இயக்கத் தோழர்களுக்கு கோரிக்கை. தமிழக முதல்வரின் உடல்நலம் இவ்வாறிருக்க, என் பிறந்தநாள் விழாக்களை கண்டிப்பாய் தவிர்க்க வேண்டுகிறேன்” என்று கூறியுள்ளார்.

Read previous post:
0a
“என்னை ‘மாண்புமிகு’ என அழைக்க வேண்டும்”: தமிழக ஆளுநர் உத்தரவு!

“ஆளுநரை மரியாதையுடன் அழைக்க ‘மேதகு ஆளுநர்’ என்ற வார்த்தையை இனி பயன்படுத்த வேண்டாம். ‘மாண்புமிகு ஆளுநர்’ என்ற வார்த்தையையே பயன்படுத்த வேண்டும்” என்று தமிழக பொறுப்பு ஆளுநர்

Close